டெல் அவிவ் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் நாட்டில் வேலை செய்து வரும் இந்தியர்கள், படித்து வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய தூதரகம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்களை
இந்திய தூதரக அதிகாரி விஷால் சந்தித்து அவர்களது நிலையை கேட்டறிந்தார்.
அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இந்தியர்களையும் தூதரக அதிகாரி சந்தித்து அவர்கள் சொந்த ஊர் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
– நமது செய்தியாளர் காஹிலா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement