இஸ்ரேலில் திடீரென ஹமாஸ் அமைப்பு நடத்தி வரும் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் இந்தியர்கள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போர்க்கப்பல்களை அனுப்பி இருக்கிறது. இப்போரில் இந்தி மற்றும் தமிழ் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை மதுரா நாயக்கின் சகோதரி மற்றும் அவரின் கணவர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் இரண்டு பேரும் அவர்களின் குழந்தைகள் கண் முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து மதுரா நாயக் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”இஸ்ரேலில் எனது குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் இன்றைக்கு துயரத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தெருக்கள் பற்றி எரிகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அதிக அளவு இதில் இலக்காகின்றனர். இதில் கொல்லப்பட்ட எனது சகோதரி ஒடாயா மற்றும் அவரது கணவரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் போட்டவுடன் சிலர் டிரோல் செய்கின்றனர். பாலஸ்தீன ஆதரவு கொள்கை எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
இதற்காக வெட்கப்படுகிறேன். நான் யூதனாக இருப்பதற்காக குறிவைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மதுரா நாயக் யூத இனத்தை சேர்ந்தவர் ஆவார். பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை முற்றிலுமாக பிடிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் கண்ணில் படும் அனைவரையும் சுட்டுக்கொலை செய்வதாக அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐநா ஊழியர்கள் தெரிவித்தனர். காஸா எல்லை பகுதியை ஹமாசிடமிருந்து கைப்பற்றி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கமாண்டர் மஹ்மூத் அல்-ஜஹர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “இந்த பூமி முழுக்க எங்களது சட்டம் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானவுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வெளியிட்டுள்ள செய்தியில்,”ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.