கல்விப் பொதுத்தராதர உயர்தர பாடங்கள் லுடன் உயர்தர வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்படும் 3000 பாடசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 8000 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு ரூபா எட்டு இலட்சம் பெறுமதியான பாதணிகள் வழங்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்
பொருளாதார குறைபாடுகள் குறைபாடுகளுடன் பிள்ளைகளுக்காக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு எதிர்காலம் 2024 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மறு சீரமைப்பு மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்ப கட்டமாக நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் பாடங்களில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக அவதானத்தை செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இப்புதிய செயற்பாடு மாணவர்கள் வினைத்திறனாக பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் தங்கியிருந்து ஒப்படை போன்ற பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியதுடன் ஆரம்ப வகுப்புகளில் பரீட்சைகளை குறைப்பதற்கு சிறுவர் பருவத்தை முறையான கற்பித்தல் மற்றும் ஆரம்ப ஆசிரியர்களாக பட்டதாரிப் பயிற்சி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு ஆரம்ப கல்வித் துறையில் வினைத்திறனை அதிகரிப்பதற்காக உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
.
காலி, கிந்தோட்டை சாஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்காக 5450 பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தற்போது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர் அதில் தேசிய பாடசாலைகளுக்காக 1700 சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளியிலும் இவ்வாட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஓய்வுபெறுதல், நாட்டை விட்டு செல்லுதல் போன்ற காரணிகளால் மாகாண மட்டங்களில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்காக போர்த்தமானவர்களை ஆட்செர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதனால் நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்றும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
அத்துடன் அடுத்த வருடமளவில் 3000உயர்தரம் கற்பிக்கும் பாடசாலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் அத்தியவசிய கட்டட நிருமாணப் பணிகளுக்காக அவசியமான நிதி ஒதுக்கப்படுவதுடன், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட வேண்டிய கட்டடப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த விபரித்தார்.