வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ”இந்தியாவுக்கும் சீனாவை போல கடன்கள் அதிகம் உள்ளன. ஆனால் இடர்ப்பாடுகள் சீனாவை விடக் குறைவாக உள்ளதால்ஆபத்துக்கள் இல்லை என பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிதி விவகாரத்துறை துணை இயக்குநர் ரூட் டீ மூயிஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தற்போதைய கடனும் சீனாவை போன்று அதிகம் உள்ளது. இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 81.9 சதவீதமாக உள்ளது. சீனாவின் கடன் அந்நாட்டின் ஜிடிபியில் 83 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு முன்பு கடன் 75 சதவீதமாக இருந்தது.
ஆனால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 8.8 சதவீதம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியான 5.4 சதவீத வட்டிக்கான செலவினங்களால் ஏற்படுகிறது. முதன்மை பற்றாக்குறை 3.4சதவீதமாக உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவை போல கடன்கள் அதிகம் உள்ளன. ஆனால் இடர்ப்பாடுகள் சீனாவை விடக் குறைவாக உள்ளதால் ஆபத்து இல்லை. சீனாவைப் போல வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடன் அதிகரிக்க வாய்ப்பில்லை.
அடுத்த 5 ஆண்டுகள் முடிவில் இந்தியாவில் கடன் சதவீதம் 1.5 ஆக குறைந்து மொத்த சதவீதம் 80.4ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தொடர்ச்சியான வளா்ச்சி அதற்கு காரணமாக இருக்கும். இவ்வாறு பன்னாட்டு நிதியத்தின் நிதி விவகாரத்துறை துணை இயக்குநர் ரூட் டீ மூயிஜ் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement