திருச்சியிலுள்ள பிரதான கடைவீதிகள், முக்கியச் சந்தைகளில் பச்சைக் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக, வனத்துறையினருக்குத் தொடர்ச்சியாக ரகசிய தகவல் கிடைத்து வந்தது. இதனால், அப்படி பறவைகளை விற்பனை செய்தவர்களை பொறிவைத்துப் பிடிக்க நினைத்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ச்சியாக கண்காணிப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருச்சி நகர்ப் பகுதி பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாகச் சோதனை செய்ததில், அங்கே விற்பனை செய்வதற்காக பச்சைக்கிளிகளை வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/01/6b80b823-e715-42cb-b482-d559571aba8d.jpg)
வனத்துறை தனிப்படையினர் தொடர்ந்து அந்த பறவைகளை விற்க முயன்ற தனிஷ் சகாய ஜென்சி, சாந்தி ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் மணிகண்டன், கார்த்திக் ஆகியோரைக் கைதுசெய்தனர். அதோடு, அவர்கள் நான்கு பேரும் தங்களது வீட்டில் விற்பனைக்காக 108 பச்சைக்கிளிகள், மற்றும் 30 முனியாஸ் பறவைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பறவைகளை மீட்ட வனத்துறை தனிப்படை அதிகாரிகள், பின்னர், 5 கூண்டு கம்பிகள், 2 வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதோடு, அவர்கள் நான்கு பேரிடமும் தனிப்படையைச் சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தங்களக்கு இந்த பறவைகளை வேட்டையாடிக் கொடுத்ததாக, திருஞானம் என்பவரைப் பற்றி தகவல் தெரிவித்தனர்.
அந்த திருஞானம் கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது வீட்டையும் சோதனை செய்து அவரிடமிருந்து, 8 முனியாஸ் பறவைகள், வேட்டைக்குப் பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் வலைகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு திருஞானத்தையும் கைதுசெய்ததோடு, ஐந்து நபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/accused_with_forest_occicers.jpg)
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட வன அலுவலர், “பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சைக்கிளிகளை விற்பதும், வாங்குவதும் ஜாமீனில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே, இந்தக் குற்றத்தை யாரும் செய்ய வேண்டாம். இது குறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச் சரக அலுவலர் திருச்சி அலைபேசி எண் 9443649119-ல் தொடர்பு கொள்ளவும். எங்களுக்கு புகார் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கடந்த இரண்டு வருடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய சோதனை இதுதான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.