பாலியல் வழக்கு பதிவில் புதிய நெறிமுறை வெளியீடு| Release of new code of practice on sexual assault case registration

புதுடில்லி ‘பாலியல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது’ என, நீதிபதி அனுாப் ஜெய்ராம் பாம்பானி, கடந்த, ஏப்.,ல் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யும்போது, கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக புதுடில்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவருடைய பெற்றோரின் பெயர், விலாசம், சமூக வலைதள விபரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்பட வேண்டும்.

வழக்கு தொடர்பான ஆவணங்களில் இந்தத் தகவல்கள் இடம்பெறக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.