வாத்து, கோழிகள் சண்டையில் தொழிலாளி வெட்டி கொலை| Worker killed ducks and chickens in a fight

வாத்து, கோழிகள் சண்டையில் தொழிலாளி வெட்டி கொலை

திருப்பத்துார்: திருப்பத்துார் அடுத்த ஏ.கே.மோட்டூரை சேர்ந்தவர், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சிலம்பரசன், 35. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர், கூடை பின்னும் தொழிலாளி வெங்கடேசன், 60. சிலம்பரசன், மூன்று வாத்துகளை வீட்டில் வளர்த்தார். வெங்கடேசனும், தன் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார். வாத்துகளும், கோழிகளும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டதால், தொழிலாளிகள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

நேற்று காலை, 8:00 மணிக்கு கோழிகளும், வாத்தும் மீண்டும் சண்டையிட்டபோது, சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த வெங்கடேசன் கத்தியால் கழுத்தில் வெட்டியதில், சிலம்பரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பத்துார் தாலுகா போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.

பலியான சிலம்பரசனுக்கு, ஜமுனா என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜமுனா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

போலி சாமியார் டில்லியில் கைது

புதுடில்லி : பெண்களுக்கு உதவு வது போல் நடித்து, பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் புதுடில்லியில் கைது செய்யப்பட்டார்.

புதுடில்லியில்
உள்ள காக்ரோலா பகுதியை சேர்ந்தவர் வினோத் காஷ்யப், 33. இவர் அதே
பகுதியில், ‘மாதா மாசனி சவ்கி தர்பார்’ என்ற பெயரில் ஆன்மிக சேவை செய்து
வந்தார்.

மேலும், ‘யுடியூப் சேனல்’ ஒன்றையும் நடத்தி வந்தார்.

அதில்,
பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுவதாக கூறினார். இதை
நம்பி அவரிடம் ஆசி பெற வந்த பெண்களை குருசேவை செய்ய வேண்டும் என கூறி,
அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து வெளியில்
கூறினால் கொலை செய்து விடுவேன் என, மிரட்டியுள்ளார். சாமியார் வினோத்
காஷ்யப் மீது இரு பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கார் திருட்டை தடுக்க முயன்ற வாடகை கார் ஓட்டுனர் பலி

புதுடில்லி : புதுடில்லியில், கொள்ளையர்கள் திருடிச் சென்ற
வாடகை காரை தடுத்து நிறுத்த முயன்ற ஓட்டுனர், 200 மீட்டர் தொலைவுக்கு
சாலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த பிஜேந்திரா, 43. வாடகை கார் ஓட்டுனரான
இவர், புதுடில்லி மஹிபால்பூர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றபோது,
மர்ம நபர்கள் சிலர், இவரை தாக்கி விட்டு, வாகனத்தை திருடிச் சென்றனர்.

அவர்களை தடுக்க முயன்ற பிஜேந்திரா மீது, காரை ஏற்றி அக்கும்பல் தப்பித்தது.

எனினும், புதுடில்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களை துரத்திச் சென்ற பிஜேந்திரா, காரைப் பிடித்தபடி ஓடினார்.

இதை
கண்ட அந்த கும்பல், காரை வேகமாக ஓட்டினர். 200 மீட்டர் தொலைவுக்கு
சென்றபின், உடல் மற்றும் தலையில் படுகாயம் அடைந்த பிஜேந்திரா, சாலையில்
மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய கும்பலை, ஆறு தனிப்படைகள் அமைத்து
போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சம்பவத்தின் போது
எடுக்கப்பட்ட, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைஅடுத்து,
குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும்படி கோரிக்கை வலுத்துள்ளது.

காதலிக்காக ரூ.6 லட்சம் மோசடி 200 பேரை ஏமாற்றியவர் கைது

ஹலசூரு கேட் : காதலிக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுக்க, பெங்களூரு மாநகராட்சி மார்ஷல் வேலை வாங்கி தருவதாக, 200 பேரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் லகொண்டனஹள்ளியைச் சேர்ந்தவர் ஹர்ஷா, 35. ஜெ.பி., நகரில் வசித்து வருகிறார். கொரோனா காலத்தில் பெங்களூரு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில், தற்காலிக ஊழியராக வேலை செய்தார். அதன்பின், பணியில் இருந்து நிறுத்தப்பட்டார்.

பணியிடங்கள் காலி

இந்நிலையில் ஹர்ஷாவுக்கு, சந்தோஷ், 24, என்பவரின் பழக்கம் கிடைத்தது. ‘மாநகராட்சியில் அதிகாரியாக வேலை செய்கிறேன்’ என்று கூறினார். ‘மாநகராட்சியில் மார்ஷல் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த வேலை வாங்கி தருகிறேன்’ என்று சந்தோஷை நம்ப வைத்து, அவரிடம் இருந்து, 3,000 ரூபாய் வாங்கி இருந்தார்.

மாநகராட்சியில் மார்ஷல் வேலை இருப்பது பற்றி, சந்தோஷ் தனது நண்பர்களிடம் கூறி இருந்தார். இதனால் சந்தோஷின் நண்பர்கள், அவருக்கு தெரிந்தவர்கள் என 53 பேர் வேலைக்காக தலா 3,000 ரூபாயை, ஹர்ஷாவிடம் கொடுத்தனர்.

இதையடுத்து தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, பணி நியமன ஆணையை ஹர்ஷா கொடுத்திருந்தார். அந்த ஆணையை வைத்து சந்தோஷ், அவரது நண்பர்கள் வேலைக்கு சேர சென்றனர்.

அந்த ஆணையை சரிபார்த்த, மாநகராட்சி அதிகாரிகள், போலி என்று கூறினர். அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், ஹர்ஷாவை தொடர்பு கொண்டார்.

போலீசில் புகார்

ஆனால், அவரது மொபைல் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. ஹலசூரு கேட் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த, ஹர்ஷாவை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் மார்ஷல் வேலை வாங்கி தருவதாக, சந்தோஷ் உட்பட 200 பேரிடம் 6 லட்சம் ரூபாய் வாங்கியதும், போலி நியமன பணி ஆணை கொடுத்து, மோசடி செய்ததும் தெரிந்தது. காதலிக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுக்க, மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

விவசாயியை விரட்டி சென்று லஞ்சம் கேட்ட ஏட்டு இடமாற்றம்

போளூர் : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ், 52. இவரது மகன் ராஜா, 27; விவசாயிகள்.

இருவரும், நேற்று முன்தினம், வேலுார் அடுத்த பொய்கையில் நடந்த மாட்டு சந்தைக்கு சென்றுவிட்டு மினி லாரியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

போளூர் அடுத்த எட்டிவாடியில், களம்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சங்கர் மற்றும் ஏட்டு விக்னேஷ், அவ்வழியாக வந்த வாகனங்களை மடக்கி, மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பிடியில் சிக்காமல், ராஜா தன் மினி லாரியை நிறுத்தாமல் சென்றார். இதில் ஆத்திரமடைந்த ஏட்டு விக்னேஷ், 1 கி.மீ., துரத்திச் சென்று, மினி லாரியை மடக்கி, ராஜாவை சரமாரியாக தாக்கி, 50 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

ஏட்டு விக்னேஷ் தாக்கியதில், ராஜாவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், ஏட்டு விக்னேஷை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். ஆரணி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் சம்பவ இடம் சென்று, ஏட்டு விக்னேஷை மீட்டார்.

தொடர்ந்து அவரது பரிந்துரைப்படி, எஸ்.ஐ., சங்கர் மற்றும் ஏட்டு விக்னேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டன

தங்கையின் கணவரை கொலை செய்தவர் கைது

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம். லோடுமேன். இவரது மனைவி பிரியா 28. ஏழு வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் உள்ள மாரி செல்வம் 3 நாட்களுக்கு முன் மனைவி, குழந்தைகளை அடித்தார்.

இதுகுறித்து பிரியா தனது வீட்டில் கூறினார். பிரியாவின் சகோதரர் மகேந்திரன் நேற்று முன்தினம் மாரிச்செல்வம் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தார். மாரிசெல்வம் பிரியாவுடன் மீண்டும் தகராறு செய்தார்.

ஆத்திரம் அடைந்த மகேந்திரன் மாரி செல்வம் வீட்டிற்கு சென்று அங்கிருந்த குளவிக்கல்லால் அவரின் தலையில் போட்டுக் கொன்றார். போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.

7.55 கிலோ தங்க கட்டிகள் தொண்டியில் பறிமுதல்

ராமநாதபுரம் : இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு கடத்திவரப்பட்ட 7.55 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

அக். 9ல் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக சிலர் தொண்டிக்கு தங்க கட்டிகள் கடத்தி வந்து தேவிப்பட்டினம் பகுதியில் பதுக்கி வைத்து கார் மூலம் சென்னைக்கு கடத்த முயன்றனர். இதையறிந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வைத்து காரில் இருந்த தேவிப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து 7.55 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.

கிறிஸ்தவர்களின் மோதலில் ஹிந்து சிறுவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி கிராமத்தில், கிறிஸ்தவ சபை ஏற்படுத்தி பிஷப் ஆக இருப்பவர் காட்பிரே நோபுள், 57. இவர் வீட்டில், இட்டேரியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் ஏழை ஹிந்து சிறுவன் வேலைகள் செய்கிறார்

latest tamil news

காட்ப்ரே நோபுளுக்கும், துாத்துக்குடி சி.எஸ்.ஐ., லே செயலர் கிப்ட்சனுக்கும் முன்விரோதம் உள்ளது. கிட்ஸ்சன் இறந்து விட்டதாக, சிறுவனின் மொபைல் எண் வாயிலாக யாரோ தகவலை பகிர்ந்துஉள்ளனர்.

கிப்ட்சன் புகார் படி, துாத்துக்குடி வடக்கு போலீசார், சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துஉள்ளனர்.

காட்ப்ரே நோபுள் கூறியதாவது:

அந்த சிறுவனுக்கு நான் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்தேன். நான் இறந்து விட்டதாக துாத்துக்குடி வாட்ஸாப் குழுவில் சிலர், சில நாட்களுக்கு முன் கண்ணீர் அஞ்சலி பதிவு செய்திருந்தனர்.

அதற்கு பதிலடியாகவே, லே செயலர் கிப்ட்சன் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி பதிவு செய்யப்பட்டது. இதற்காக, என்னிடம் வேலை பார்த்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.