தெற்கு இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலுள்ள ரெய்ம் என்ற பகுதியில், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6 வரை யூதர்களின் விஷேச விழாவான சுக்கோட்டை முன்னிட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறையைக் கொண்டாடும் வகையில், சூப்பர் நோவா என்ற இசைத் திருவிழா கடந்த 7-ம் தேதி அங்கு நடந்தது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில்தான் பாலஸ்தீன ஹமாஸ் போராளிக்குழு, ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். திருவிழாவில் பாராகிளைடர் வழியாக இறங்கிய ஹமாஸ் குழுவினர், பலரை பணயக்கைதிகளாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹமாஸ் குழுவிடமிருந்து தப்பிக்க, அமித் – நிர் என்ற தம்பதி, அங்கிருந்த புதரில் விழுந்து ஒளிந்திருக்கிறது. அப்போது இருவருக்கும் அதிக அளவு பதற்றமும், அச்சமும் இருந்திருக்கிறது.
ஒருவேளை ஹமாஸ் குழுவிடம் சிக்கினால், பிணைக்கைதிகளாக அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்ற பதற்றத்துக்கிடையில், இதற்குப் பிறகு உயிரோடு இருப்போமா எனக் கண்ணீர்விட்டிருக்கிறார்கள். மேலும், இதுவே தங்களது கடைசி சந்திப்பாக இருக்கலாம் எனக் கருதி, இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டு விடைபெற நினைத்திருக்கிறார்கள்.
ஒருவேளை உயிர் பிழைக்கவில்லை என்றால், தங்கள் காதல் இதன் மூலம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற எண்ணத்தில் அதை செல்போனில் படமாகவும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், ஹமாஸ் குழுவினரின் பார்வையிலிருந்து தப்பி, இருவரும் உயிர்பிழைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அப்போது எடுக்கப்பட்ட அந்தப் பதற்றமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகிவருகிறது. சமூக வலைதள பயனர்கள், இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, பாராட்டி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.