What to watch on Theater & OTT: ஆக்‌ஷன், க்ரைம், பேங்க் ராபரி – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

AKKU (தமிழ்)

AKKU

வி.ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின், காயத்ரி ரெமா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘AKKU’. ஒரு பெண்ணின் மர்மமான கொலையைச் சுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

புது வேதம் (தமிழ்)

புதுவேதம்

ராசவிக்ரம் இயக்கத்தில் ஜெய் விக்னேஷ், ரமேஷ், இமான் அண்ணாச்சி, மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புதுவேதம்’. குப்பை மேலாண்மை பணிகளில் ஈடுபட்டு வரும் இரண்டு நண்பர்கள் மற்றும் அப்பணியைச் சுற்று நடக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் அக்டோபர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Samara (மலையாளம்/தமிழ்)

Samara

சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் ரஹ்மான், பரத், பினோஜ் வில்லியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளம்/தமிழ்த் திரைப்படம் ‘Samara’. காஷ்மீர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகளைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடித்துகிறார் காவல் அதிகாரியான ரஹ்மான். இதன் பின்னணி என்ன, இந்தத் தொடர் கொலைக்கும் பரத்திற்கும் என்ன தொடர்பு என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம் த்ரில்லர் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் ஜானர் திரைப்படமான இது அக்டோபர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Dhak Dhak (இந்தி)

Dhak Dhak

தருண் துடேஜா இயக்கத்தில் பாத்திமா சனா ஷேக், தியா மிர்சா, பெனடிக்ட் காரெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dhak Dhak’. சாதாரணக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நான்கு வெவ்வேறு வயதுடையைப் பெண்கள் பல தடைகளைத் தாண்டி நீண்ட தூரம் லடாக் வரை பைக்கில் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இந்தப் படம் அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Paw Patrol (ஆங்கிலம்)

Paw Patrol

கால் புருங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன், அட்வென்சர் அனிமேஷன் திரைப்படம் ‘Paw Patrol’. சாதாரண பூனைகளுக்கு விண்ணிலிருந்து வந்து விழுந்த ஒரு பெரிய கல் மூலம் சூப்பர் பவர் கிடைக்கிறது. அதை வைத்து அந்தப் பூனைகள் என்னவெல்லாம் செய்தது என்பதுதான் இதன் கதைக்களம். இந்தப் படம் அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Dumb Money (தமிழ்)

Dumb Money

கிரேக் கில்லெஸ்பி இயக்கத்தில் பால் டானோ, பீட் டேவிட்சன், வின்சென்ட் டி’ஓனோஃப்ரியோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள் திரைப்படம் ‘Dumb Money’. ‘GameStop’ என்ற மிஷன் மூலம் நாட்டில் இருக்கும் பல பணக்காரர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹேக்கர் பற்றிய கதைதான் இதன் கதைக்களம். இந்தப் படம் அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்

Prema Vimanam (தெலுங்கு) –  Zee5

Prema Vimanam

சந்தோஷ் கட்டா இயக்கத்தில் வெண்ணேலா கிஷோர், சங்கீத் ஷோபன், சான்வே மேகனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Prema Vimanam’. விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவுடன் சிறுக சிற்க பணம் சேகரிக்கும் இரண்டு சிறுவர்கள் மற்றும் அந்த ஊரில் இருக்கும் காதல் ஜோடிகளின் கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

The Burial (ஆங்கிலம்) – Amazon Prime Video

The Burial

மேகி பெட்ஸ் இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ், டாமி லீ ஜோன்ஸ், ஜர்னி ஸ்மோலெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Burial’. டாமி லீ ஜோன்ஸ்க்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிகேட்டு சரியான நீதி வாங்கித்தரப் போராடுகிறார் வழக்கறிஞர் ஜேமி ஃபாக்ஸ். இந்த இருவரின் நடிப்பில் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

Awareness (ஸ்பேனிஷ்) – Amazon Prime Video

Awareness

டேனியல் பென்மேயர் இயக்கத்தில் பெட்ரோ அலோன்சோ, என்ஸோ காலேஜா, ஜீசஸ் காஸ்டெல்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பேனிஷ் மொழி திரைப்படம் ‘Awareness’. சூப்பர் பவரை வைத்து பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் கதாநாயகன் ஒருகட்டத்தில் தனது பவரைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் செல்கிறார். அதன் பின் அவர் எப்படி தன் எதிரிகளை எதிர்கொண்டார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 11ம் தேதி வெளியாகியுள்ளது.

Once Upon a Star (தாய்) – Netflix

Once Upon a Star

Nonzee Nimibutr இயக்கத்தில் Darina Boonchu, Sukollawat Kanarot, Nuengthida Sophon உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தாய்லாந்து மொழி திரைப்படம் ‘Once Upon a Star’. ஊர் ஊராகச் சென்று நாடகம் போட்டு மக்களை மகிழ்விக்கும் நாடகக் குழு பற்றிய கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் அக்டோபர் 11ம் தேதி வெளியாகியுள்ளது.

In My Mother’s Skin (தகலாக் – பிலிப்பைன்ஸ் மொழி) – Amazon Prime Video

In My Mother’s Skin

கென்னத் தகடன் இயக்கத்தில் ஏஞ்சலி பயனி, ஜாஸ்மின் கர்டிஸ்-ஸ்மித், ஜேம்ஸ் மேவி எஸ்ட்ரெல்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘In My Mother’s Skin’. இரண்டாம் உலகப் போரின் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தன் தாயை இளம் வயது மகள் எப்படிக் காப்பாற்றினார், அவரது போராட்டம் எப்படிப்பட்டது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் அக்டோபர் 12ம் தேதி வெளியாகியுள்ளது.

Past Lives (கொரியன்) – Lionsgate Play

Past Lives

செலின் சாங் இயக்கத்தில் கிரேட்டா லீ, தியோ யூ, ஜான் மகரோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கொரியன் திரைப்படம் ‘Past Lives’. சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் 20 வருடத்திற்குப் பிறகு சந்தித்து தங்களது கடந்த காலங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Conference (ஸ்வீடிஷ்) – Netflix

The Conference

பாட்ரிக் எக்லண்ட் இயக்கத்தில் கேட்டியா வின்டர், ஈவா மெலன்டர், ஆடம் லுன்ட்கிரென் உள்ளீட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீடிஷ் மொழி திரைப்படம் ‘The Conference’. பழைய கட்டடத்தில் நடக்கும் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு நடக்கும் மர்மமான அமானுஷ்ய விஷயங்கள்தான் இதன் கதைக்களம். ஹாரர், திரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 13ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்

மத்தகம் – 2 (தமிழ்) – Disney+ Hotstar

மத்தகம்

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன், ஷரத் ரவி, நிகிலா விமல், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘மத்தகம்’. நேர்மையான காவல் அதிகாரியான அதர்வா, ஒரு பெரிய குற்றம் செய்யத் திட்டமிடும் கும்பலையும், அதன் தலைவனின் (மணிகண்டன்) அசாத்திய திட்டங்களையும் முறியடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

போலீஸ் – ரவுடி கும்பல்களுக்கிடையே நடக்கும் க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இதன் முதல் பாகம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

Sultan Of Delhi (இந்தி)- Disney+ Hotstar

Sultan Of Delhi

மிலன் லூத்ரியா இயக்கத்தில் அனுப்ரியா கோயங்கா, மௌனி ராய், ஹர்லீன் சேத்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sultan Of Delhi’. அர்ஜுன் பாட்டியா எப்படி டெல்லியில் ஒரு மிகப்பெரிய ஆளாக மாறினார் என்பதை ஆக்ஷன், திரில்லராகச் சொல்கிறது இந்த வெப்சீரிஸ். இது அக்டோபர் 13ம் தேதி முதல் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

The Fall of the House of Usher (ஆங்கிலம்) – Netflix

The Fall of the House of Usher

ஹாரர் படைப்புகளுக்குப் பெயர்போன மைக் ஃபிளனகன் இயக்கத்தில் கார்லா குகினோ, புரூஸ் கிரீன்வுட், மேரி மெக்டோனல் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘The Fall of the House of Usher’. ஹாரர் திரில்லர் வெப்சீரிஸான இது அக்டோபர் 13ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Goosebumps (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Goosebumps

ராப் லெட்டர்மேன், நிக்கோலஸ் ஸ்டோலர் ஆக்கத்தில் ரேச்சல் ஹாரிஸ், ஜஸ்டின் லாங், ராப் ஹூபெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Goosebumps’. ஆக்‌ஷன், அட்வென்சர், காமெடி நிறைந்த இந்த வெப்சீரிஸ் அக்டோபர் 13ம் தேதி முதல் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Everybody Loves Diamonds (இத்தாலிய மொழி) – Amazon Prime Video

Everybody Loves Diamonds

ஜியான்லூகா மரியா, டவரெல்லி இயக்கத்தில் கிம் ரோஸ்ஸி ஸ்டூவர்ட், அன்னா ஃபோக்லீட்டா, ஜியான்மார்கோ டோக்னாஸி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Everybody Loves Diamonds’. பல மில்லியன் டாலரைக் கொள்ளையடிக்க முயற்சி செய்யும் கும்பலைப் பற்றிய வெப்சீரிஸ் இது. இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் அக்டோபர் 13ம் தேதி முதல் வெளியாகிறது.

தியேட்டர் டு ஓடிடி

மார்க் ஆண்டனி (தமிழ்) – Amazon Prime Video

மார்க் ஆண்டனி – சினிமா விமர்சனம்

‘AAA’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ரெட்ரோ கேங்ஸ்டர் திரைப்படமான இது தற்போது ‘Amazon Prime Video’ வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Matti Katha (தெலுங்கு) – Aha

Matti Katha

பவன் கடியாலா இயக்கத்தில் ராஜு அலுரி, மல்லேஷ், நந்த கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படம் ‘Matti Katha’. ஜாலியாகச் சுற்றித் திரியும் மூன்று நண்பர்கள் தங்களது சொந்த நிலத்தை மீட்கப் போராடுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kasargold (மலையாளம்) –  Netflix

Kasargold

மிருதுல் நாயர் இயக்கத்தில் ஆசிப் அலி, சன்னி வெய்ன், விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Kasargold’. தங்கக் கொள்ளையை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Phantom (கொரியன்) – SonyLIV

Phantom

லீ ஹே-யங் இயக்கத்தில் சோல் கியுங்-கு, லீ ஹானி, பார்க் சோ-டம், பார்க் ஹே-சூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கொரியன் மொழித் திரைப்படம் ‘Phantom’. ஸ்பை திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதில் உங்களின் சாய்ஸ் என்ன என்பதை கமென்ட்டில் பதிவிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.