Yamaha E-FV – யமஹா மோட்ராய்டு 2, E-FV எலக்ட்ரிக் ரேஸ் பைக், இலவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

யமஹா நிறுவனம் E-FV எலக்ட்ரிக் மினி ரேஸ் பைக் மற்றும் தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் இலவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என இரண்டு கான்செப்ட் நிலை மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு எலக்ட்ரிக் கான்செப்ட் வாகனங்களும் வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 5 வரை நடைபெற உள்ள ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

yamaha motoroid 2

Yamaha MOTOROiD2

எதிர்காலத்தில் மனிதன் மற்றும் இயந்திரத்துக்கு இடையே மிக சிறப்பான நெருக்கத்தை கொண்டு மனிதனின் தேவைக்கேற்ப தன்னை செயற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டதாக மோட்ராய்டு 2 கான்செப்ட் வாகனங்கள் செயல்படும்.

ரைடரின் முகபாவங்களை கனித்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாக விளங்கும்.

Yamaha E-FV mini racebike

ஆரம்ப நிலை ரேஸ் பயில விரும்பும் ரேஸ் பைக் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட உள்ள E-FV எலக்ட்ரிக் மினி ரேஸ் பைக் கான்செப்ட்டில் பெட்ரோல் பைக்குகளை போல ஒலி எழுப்புவதற்காக பிரத்தியேக ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு ஸ்போர்ட்டிவான ரேசிங் அனுபவத்தை வழங்கும் வகையிலான பவரை வெளிப்படுத்தக்கூடும்.

yamaha e-fv mini racebike

Yamaha ELOVE

செல்ஃப் பேலன்சிவங் நுட்பத்தை பெற்றதாக வரவிருக்கும் யமஹா இலவ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டில் AMSAS (Advanced Motorcycle Stability Assist System) எனப்படுகின்ற நுட்பத்தின் மூலம் மிக சிறப்பான வகையில் தன்னுடைய நிலைப்பு தன்மையை மேம்படுத்திக் கொள்ளுகின்றது. இந்த நுட்பம் ஆரம்ப நிலை கான்செப்ட்டில் உள்ளது.

yamaha evolve

Yamaha TRICERA

மூன்று சக்கர ஓப்பன்-டாப் எலக்ட்ரிக் ஆட்டோசைக்கிள் மாடல் எதிர்கால தேவைக்கு பதிலளிக்கக்கூடிய வாகனத்தை இயக்குவதில் இருந்து பெறப்பட்ட நுட்பத்தை தொடர்கிறது. அதன் வளர்ச்சிக் கருத்து “பரபரப்பான நகர்ப்புற இயக்கம்: ஒருவரின் உடலும் மனமும் மற்றும் இயந்திரம் கொண்டு செயல்படுத்த உதவும்.

yamaha TRICERA view yamaha TRICERA

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.