உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நாளை அகமதாபாத்தில் மோத உள்ள நிலையில், பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதல் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் இப்போட்டியை நேரில் கண்டு ரசிக்க இருக்கின்றனர். உலக கோப்பை தொடங்கும்போது கூட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாத நிலையில், அந்த குறையை போக்கும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
icCrazyJohns) October 12, 2023
ரசிகர்கள் காலை 10 மணி முதலே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். சரியாக 12 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட இருக்கிறது. பாலிவுட் பிரபலங்களான அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங், சுனிதி சவுகான், நேஹா கக்கர், ஷங்கர் மகாதேவன் ஆகியோரின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன. 12.30 மணிக்கு சரியாக கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட இருக்கிறது.
ohns) October 12, 2023
மைதானத்துக்குள் செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பர்ஸ், மொபைல் போன்கள், தொப்பி மற்றும் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இலவச தண்ணீர் மற்றும் முதலுதவி மருத்துவ சிகிச்சை எல்லாம் குஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் கொடுக்கப்பட இருக்கிறது.
CrazyJohns) October 12, 2023
மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை சிறப்பாக தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்றது. இதேபோல பாகிஸ்தான் அணியும் இலங்கை மற்று நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.