உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை நீங்கள் ஏர்டெல் நிறுவனத்துடன் கொண்டாடலாம். ஏர்டெல் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால் டபுள் டமாக்கா ஆஃபர் தான். ஏனென்றால் குறைந்த விலையில் சூப்பரான டேட்டா பிளான்களை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும், சிறந்த ஏர்டெல் டேட்டா பேக்குகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், வெவ்வேறு பயன்பாடுகளின் அடிப்படையில் நான்கு டேட்டா பேக்குகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். விலை அடிப்படையில் அதனை விவரங்களை பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 49 டேட்டா பேக்
ஏர்டெல் 49 டேட்டா பேக் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் மூலம் ஒரு ஜிபி விலை சுமார் ரூ. 8 ஆக இருக்கும். நீங்கள் பயணம் செய்தால் அல்லது ஒரு நாள் வைஃபை இல்லாத பகுதியில் இருந்தால், இந்த டேட்டா பேக் பயனுள்ளதாக இருக்கும். முழுமையாக டேட்டாவை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால் ஒரு எம்பிக்கு 50 பைசாவாக வசூலிக்கப்படும்.
ஏர்டெல் ரூ 99 டேட்டா பேக்
நீங்கள் 2 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா பேக்கை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர்டெல் 99 அன்லிமிடெட் டேட்டா பேக் மிகவும் வசதியானது. ஏர்டெல் ரூ.99 பேக் ஒரு நாளைக்கு 20ஜிபி என்ற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் 2 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. மொத்தம் 40ஜிபி திட்டத்தில். ஒரு நாளைக்கு 20 ஜிபி பயன்படுத்தினால், வேகம் 64 கேபிபிஎஸ் வரை இருக்கும்.
ஏர்டெல் ரூ 181 டேட்டா பேக்
நீண்ட காலத்திற்கு தினசரி கூடுதல் டேட்டாவை உபயோகிப்பவர் என்றால், Airtel 181 டேட்டா பேக் சிறந்த உதவியாக இருக்கும். அக்டோபர் பண்டிகை மாதமாக இருப்பதால், அதிக டேட்டா உபயோகம் ஏற்பட்டாலோ அல்லது பயணத்தின் போது கூடுதல் டேட்டா தேவைப்பட்டாலோ, இந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் தினசரி 30 நாட்களுக்கு உங்களின் தற்போதைய அடிப்படைத் திட்டத்தில் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பிறகு, டேட்டாவிற்கு ஒரு எம்பிக்கு 50p என்ற அளவில் கட்டணம் விதிக்கப்படும்.
ஏர்டெல் ரூ.301 டேட்டா பேக்
எங்கள் டாப் லிஸ்டில் இருக்கும் கடைசி பேக் ரூ.301 பேக் ஆகும். நீங்கள் தற்போது வைத்துள்ள பேஸிக் திட்டத்துடன் இணைந்து செல்லுபடியாகும் பிளான் என்றால் இந்த 50 ஜிபி பிளான் தான். இந்த பேக், பயணத்தின்போது அல்லது வைஃபை அணுகல் இல்லாத நாட்களில் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பேக் ஒரு வருட Wynk Music Premium சந்தாவுடன் வருகிறது.