இந்தியா – பாகிஸ்தான் மோதல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் இசை விருந்து ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. மேலும், இந்திய முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள், சச்சின் தெண்டுல்கர், அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.
அகமதாபாத் பிட்ச் எப்படி?
இதனால் இப்போட்டி ரசிகர்களுக்கு கண்கவர் விருந்தாக இருக்கும். அதற்கேற்ப மைதானமும் பேட்டிங்கிற்கு உகந்த மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற உலக கோப்பை முதல் போட்டியில் கூட இங்கிலாந்து அணி நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே வெற்றிகரமாக எட்டியது. இதனால் ரன் மழைக்கு அகமதாபாத்தில் பஞ்சம் இருக்காது.