இன்று திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் காந்திகிராம பல்கலை வளாகத்தில் உள்ள காந்திகிராம ஊழியரகத்தில் நடைபெற்றது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231013_WA0045.jpg)
சமூகசேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட இயக்குநர் தன்ராஜ் காளான் முக்கியத்துவம் குறித்து பேசினார். தேனி மாவட்டம் ஓடைபட்டியைச் சேர்ந்த காளான் விதை உற்பத்தி நிறுவன உரிமையாளர் கண்ணன், காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி, சிப்பு காளான் உற்பத்தி செயல் விளக்கம் அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். மேலும், அவர்களாக காளான் வளர்ப்புக்கான வைக்கோல் பெட்களை தயாரித்து பயிற்சி பெற்றனர்.
இதில் பேசிய காளான் விதை உற்பத்தி நிறுவன உரிமையாளர் கண்ணன், ”கிராமங்களில் திருவிழாக்களில் போடப்படும் முளைப்பாரி போல தான் காளான் வளர்ப்பு. முளைப்பாரிக்கு எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ அதேபோல தான் காளான் வளர்ப்பிலும் சுத்தம் முக்கியம். காளான் செட் அமைத்தாலும் எல்லோரும் செட்டுக்குள் செல்லக் கூடாது. வைக்கோல் பெட் அமைத்தவர்கள் தான் செட்டுக்குள் சென்று தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உற்பத்தி நன்றாக இருக்கும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG20231013143632.jpg)
காளான்கள் சோளம், கம்பு உள்ளிட்ட நவதானியங்களில் இருந்து உருவாக்க முடியும். ஆனால் வெள்ளை சோளத்தில் இருந்து உருவாக்கும் காளான் விதைகள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பூமியில் லட்சக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. இதில் நன்மை தரக் கூடிய, தீமை ஏற்படுத்தக் கூடிய காளான் வகைகளும் அடக்கம். இதில் மனிதர்கள் உணவுக்கு பயன்படுத்திய காளான் வகைகளில் முக்கியமானதாக சிப்பி காளான், பால் காளான், பட்டன் காளான், வைக்கோல் காளான் என்ற 4 வகை உள்ளது. இதில் பெரும்பாலும் நம் விவசாயிகள் சிப்பி காளான்களை உற்பத்தி செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சிப்பி காளானில் வெள்ளை காளான், பிங்க் காளான், எல்லோ காளான், கோ 5, எச்.யூ., ஏபிகே-1 உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.
தற்போது மக்கள் சிக்கன் உணவுக்கு பதிலாக காளானை விரும்பி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தேவை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள், காளான் வளர்ப்பில் அதிகம் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இதற்கு அதிக முதலீடு தேவை என்பதும் முக்கிய காரணமாக உள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231013_WA0044.jpg)
காளான் விதைக்கு 90 நாள்களும் அதன் வளர்ச்சிக்கு 30 என 120 நாள்கள் உற்பத்திக்கு தேவைப்படும். நான்கு கிலோ பெட்டில் இருந்து 1.15 கிலோ காளான் உற்பத்தி செய்ய முடியும். முதலில் காளான் வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் ஒரு பெட், இரண்டு பெட் போட்டு காளான்களை உருவாக்க வேண்டும். பிறகு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். காளான் வளர்ப்புக்கான செட்டுக்குள்ளும் செட்டுக்கு வெளியேயும் கூட பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது, எலி மருந்து வைப்பது போன்ற செயல்களை செய்யக் கூடாது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231013_WA0043.jpg)
அந்த மருந்தின் வாடை அடித்தால் கூட காளான் வளர்ச்சி பாதிக்கும் அதேபோல வைக்கோல் பெட்டில் 60 சதவிகித ஈரப்பதம் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதை 200 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதில் இருந்து 5 அடுக்கு கொண்ட 6 பெட்களை உருவாக்க முடியும். ஒரு பெட்டுக்கான செலவு 40 ரூபாய் மட்டுமே. ஆனால் நல்ல உற்பத்தி மூலம் கிலே 150 முதல் 300 வரை விற்பனை செய்ய முடியும்” என்றார்.