டெல் அவிவ்: சிரியாவின் இரு விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ், அலெப்போ சர்வதேச விமான நிலையங்களுக்கு ஈரான் நாட்டில் இருந்து விமானங்களில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதை தடுக்க சிரியாவின் இரு விமான நிலையங்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் கடுமையாக சேதமடைந்தன. இதன் காரணமாக டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஈரானில் இருந்து ஆயுதங்களுடன் வந்த விமானம், மீண்டும் ஈரானுக்கு திரும்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.