![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231013110231549885.jpg)
மகளுக்கு ரிதன்யா என்று பெயர் சூட்டிய நடிகர் புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதோடு சில திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். புகழ் மற்றும் அவரது மனைவி பென்சி ஆகிய இருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த தகவலை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் புகழ்.
இந்நிலையில் தற்போது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருப்பவர், தனது மகளுக்கு ரிதன்யா என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு இன்ஸ்டாகிராமில், என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ, கம்பன் என்றிருந்தால் உனக்கென தனிக் கவிதையே வடித்து இருப்பானடி, ஊரே கண் வைக்கும் அளவிற்கு பிரம்மன் படைத்த காவியம் நீயடி. என் செல்ல மகளே. கவிதைக்கு தனி பெயர் தேவையில்லை. இருந்தாலும் எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே இன்று முதல் நீ ரிதன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே. எங்களின் மகாராணிக்கு ரிதன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.