உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.,கிற்கு எதிரான போட்டியில் இந்தியா பவுலிங்| Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against Pakistan.

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்தார்.

இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர் இஷான் கிஷான் நீக்கப்பட்டு சுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, அஷ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.