வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் காயமடைந்த சுமார் 7,900 பேர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் துவக்கினர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால், இஸ்ரேல் நிலை குலைந்து போனது. சற்று நேரத்தில் சுதாரித்த இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக பதில் தாக்குதலை துவக்கியது. இந்த போரில் இரு தரப்பிலும் இதுவரை 2,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஐ.நா தரப்பில் வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவிற்குள்ளே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியால் பாதுகாப்பான இடங்களில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்தனர்.
பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது. சுகாதாரமற்ற நீரை மக்கள் பருகுவதால் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம். இவ்வாறு ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
வலியுறுத்தல்
காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்ததை திரும்ப பெற வேண்டும் என ஐநா தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி குறிப்பிட்டார்.
மேலும், அவர், ”பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து பல லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனை இஸ்ரேல் திரும்ப பெற வேண்டும். ஏனெனில் இந்த முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement