![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231013120918510522.jpg)
மீண்டும் சிகிச்சை பெறும் சமந்தா?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். மீண்டும் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நேற்று பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் என்ன மாதிரியான சிகிச்சையைப் பெற்று வருகிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன்பின் பகிர்ந்த ஒரு வீடியோவில் தன்னுடைய செல்ல நாயுடன் விளையாடிக் கொண்டிருப்பதையும் பகிர்ந்துள்ளார்.
வெளிநாடு சென்று சிகிச்சை பெற உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது ஐதராபாத்திலேயே சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் எனத் தெரிகிறது.