இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை போட்டியில் மோத உள்ளன. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இந்த அட்டகாசமான போட்டிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீசுவதாக கூறினார்.
ctober 14, 2023
மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை சிறப்பாக தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்றது. இதேபோல பாகிஸ்தான் அணியும் இலங்கை மற்று நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது