திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள சிவ-விஷ்ணு மற்றும் ஜலநாராயண பெருமாள் கோயில் விசேஷமானது. நேபாளில் எழுந்தருளி இருக்கும் அதே ஜலநாராயண பெருமாள் இங்கும் வீற்றிருப்பது அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். சிவா விஷ்ணு ஆலயமாக 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழும்பிய இந்த ஆலயம் தற்போது ஜலநாராயணர் உள்ளிட்ட 46 சந்நதிகள் கொண்டுள்ளது. அருள் வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சந்நிதியும் இங்கு முருகன் சந்நதியை நோக்கியவாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 10 டன் எடை கொண்ட ஜலநாராயணர் சிலை, தீர்த்தக்குளத்தில் அமைந்துள்ளது. 11 தலை ஆதிசேஷன் நாகத்தின் மேல் பள்ளி கொண்ட வடிவில் சங்கு சக்கரம், கதாயுதம், அட்சய பாத்திரத்துடன் கூடிய நான்கு திருக்கரத்துடன் ஆகாயத்தை நோக்கி புன்னகை நிரம்பிய வதனத்துடன் அருளுகின்ற ஜலநாராயணப் பெருமாளின் திவ்யத் திருகோலம் எழுத்தில் சொல்ல முடியாதது எனலாம்.
ஜலநாராயணர் சந்நிதி இங்கு சிறப்பாக அமைய ஆலய அறங்காவலர் குழுத்தலைவர் எம்.பசுபதி-ராதா தம்பதியருக்கு 16 ஆண்டுகள் முன்பு நேபாளத்தின் காட்மாண்டுக்கு சென்ற போது எண்ணம் உதித்ததாம். சயன பெருமாளாக பல இடங்களில் பெருமாள் வீற்றிருந்தாலும் இங்கு மட்டுமே நீரில் எழுந்தருளி ஜலசயன பெருமாளாக காட்சி தருகிறார். மற்றபடி இங்கே சிவன், விஷ்ணு, அம்பிகை, தாயார் உள்ளிட்ட சகல தெய்வ சந்நிதிகளும் உள்ளன. சாய்பாபா உள்ளிட்ட எல்லா சந்நிதியும் இருப்பதால் ஆண்டின் எல்லா நாள்களும் இங்கு விழாக்கோலம்தான் எனலாம். குறிப்பாக இங்கு செய்யப்படும் எல்லா பரிகார பூஜைகளும் விரைவில் பலன் அளிக்கக் கூடியது என்கிறார்கள்.
இதனால் சகல ஜீவராசிகளின் சுபீட்சத்துக்காகவும் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 27-10-23 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் திருவள்ளூர் காக்களூர் சிவா-விஷ்ணு மற்றும் ஜலநாராயணப் பெருமாள் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது.
எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கவும், சொந்த வீடு அமைய, கல்யாண வரம் கைகூட, கடன் பிரச்னைகள் நீங்கிட, பிள்ளைப் பாக்கியம் கிடைக்க… என சகல பிரார்த்தனைகளை முன்வைத்து நடைபெறவுள்ளது இந்த விளக்குப் பூஜை.
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
ஆலய நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்காத செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட வாழ்வும் அருளும் இந்த சந்நிதியில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.
இந்த விளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டால் ஜலநாராயண பெருமாள் அருளால் சர்வ மங்கலங்களும் கிடைக்கும் என்பது உறுதி. நாம் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். நம்முடைய மனச் சங்கடங்கள் அனைத்தும் விலகும்; பெண்கள் பூஜையில் அமரலாம். உங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப உறவுகள், சுற்றம் நட்புகள் நலம்பெற வேண்டிக் கொள்ளலாம்.
திருமண பிரார்த்தனை செய்து கொள்ள விரும்புபவர்கள் வரன்களின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பூஜிக்கலாம்.
27-10-23 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் திருவள்ளூர் காக்களூர் சிவா-விஷ்ணு மற்றும் ஜலநாராயணப் பெருமாள் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
விளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை!
*குறித்த நேரத்தில் வரவும். மனது ஒன்றி, மற்றவருக்கு தொந்தரவு தராமல் இந்த பூஜையை செய்தல் வேண்டும்.
* விளக்குப் பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல மண், பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலை வாழை இலை மீது விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது குச்சியால் அணைக்கலாம்.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் திருமாங்கல்யத்திலும், தலை உச்சி வகிடுலும் வைத்துக்கொள்ள கணவர் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்வர்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
ஆலயத்துக்கு வரும் வழி: சென்னை-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் புட்லூர் ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோவில் வரலாம். பேருந்தில் திருவள்ளூர் வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் வரலாம்.