கிளிநொச்சி தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்(NISD) கிளிநொச்சி பிராந்திய நிலையத்தால் சமூகப் பணி பட்டப்படிப்பு மற்றும் உளவளத்துணை டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 021 2283044 என்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானத்தின் (NISD)கிளிநொச்சி பிராந்திய நிலைய தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது (NISD) இலங்கையில் சமூகப்பணி கல்வியை வழங்கும் முன்னோடியாள் நிறுவனமாகும்.

இது மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்று சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கிவருவதோடு சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருத்திக்கு தேவையான மனித வளங்ளை கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுகின்றது.

மேலும், இந்நிறுவனமானது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக் குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனமாக 1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 25 A பிரிவின் கீழ் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது (NISD) கிளிநொச்சி பிராந்திய நிலையத்தின் ஊடாக சமூகப்பணி முதுமானி கற்கை நெறியினை (Master of Social Work) நடாத்த தீர்மானித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.