![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231016122246501729.jpg)
24 கேரட் தங்க ஐபோனை கிரிக்கெட் மைதானத்தில் தொலைத்த ‛லெஜன்ட்' பட நடிகை
லெஜண்ட் சரவணன் நடித்த லெஜன்ட் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இவர் நேற்று முன்தினம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது விளையாட்டை பார்க்கும் ஆர்வத்தில் தன்னுடைய 24 கேரட் சுத்த தங்கத்தினால் ஆன ஐபோனை அந்த ஸ்டேடியத்தில் தொலைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், என்னுடைய 24 கேரட் சுத்த தங்கத்தினாலான ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்து விட்டேன் . அதனால் அந்த போனை யாராவது பார்த்தால் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.