![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697468419_NTLRG_20231016120634245623.jpg)
6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் ஸ்ரீதிவ்யா படம்
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடித்த ஸ்ரீதிவ்யா, பின்னர் ஹீரோயினாக நடித்தார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ திற' படத்தில் நடித்தார். தற்போது 6 வருடங்களுகு பிறகு அவர் தமிழில் நடித்துள்ள 'ரெய்டு' படம் தீபாவளி அன்று வெளிவருகிறது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க, இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகேமணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.