![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697532491_NTLRG_20231017122203982009.jpg)
கேரளாவில் கேஜிஎப் -2 படத்தின் சாதனையை முறியடித்த விஜய்யின் லியோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் வருகிற 19ம் தேதி திரைக்கு வருகிறது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகமான தியேட்டர்களில் லியோ படம் வெளியாக உள்ளது. குறிப்பாக, எப்போதுமே தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
தமிழ் ரசிகர்களை போலவே கேரளத்து ரசிகர்களும் அவருக்கு பெரிய அளவில் கட் அவுட், பேனர்கள் வைத்து அவரது படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கேரளாவில் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் தற்போது அதிக வசூல் செய்த படம் என்கிற பட்டியலில் யஷ் நடித்த கேஜிஎப் -2 படம் இடம்பெற்றுள்ளது. அந்த படம் முதல் நாளில் 7.25 கோடி வசூலித்து சாதனை செய்திருக்கிறது.
ஆனால் இப்போது விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் டிக்கெட் முன்பதிவே இதுவரைக்கும் 7.4 கோடிக்கு மேல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. அதனால் கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பட்டியலில் இருந்து வந்த கேஜிஎப் -2 பட சாதனையை விஜய்யின் லியோ முறியடித்து விடும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.