2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலாவது துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக டீநn ளுவழமநள 43 ஓட்டங்களையும், துழnலெ டீயசைளவழற 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 3 விக்கட்டுக்களையும் என்ஜலோ மெத்திவ்ஸ் மற்றும் கசுன் ராஜித தலா 2 விக்கட்டுக்கள் வீதமும், மஹீஷ் தீக்ஷன ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 26 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பெத்தும் திஸ்ஸங்க 77 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக னுயஎனை றுடைடநல 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
35 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்திதிய லஹிரு குமார, போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி, அவ்வருடத்தைப் போன்று இவ்வருடமும் இலங்கையிடம் தோல்வியடைந்தமை விசேட அம்சமாகும்.