உயர்தரமான தேயிலைச் செடிகளை விவசாயத் திணைக்களத்தின் விதை விதி மற்றும் நடுகைப் பொருள் உற்பத்தி மத்திய நிலையங்களுக்கு ஊடாக உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்பான கலந்துரையாடல் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வின் தலைமையில் (28) இடம்பெற்றது.
நாட்டின் கைத்தொழில் துறையில் காணப்படும் தேயிலை உற்பத்திக்காக புதிதாக செய்கையினை மேற்கொள்ளல், தேயிலைத் திட்டங்களை உருவாக்குதல் போன்ற தேவைகளுக்காக வருடாந்தம் 20 மில்லியன் தேயிலைக் கன்றுகள் தேவைப்படுவதுடன் உயர் தரத்திலான தேயிலைக் கன்றுகள் கிடைக்கப் பெறாமையினால் தோட்டங்களில் அறுவடையின் போது பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதுடன் தேயிலைச் செய்கையில் நெமோடேடா மற்றும் வட்டப்புழு நோய் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைகின்றன.
உயர் தரத்திலான தேயிலைக் கன்றுகளை பெறமுடியாமையினால் தற்போது 20 நாற்றுமேடைகள் கைவிடப்பட்டுள்ளன. அவ்வாறே 490 மில்லியன் ரூபாவை நிவாரணமாக வழங்குவதன் ஊடாக மேலும் தேயிலைக் கன்றுகளை உற்பத்தி செய்யும் 200 நாற்றுமேடைகள் உருவாக்குவதற்காக அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனால் உயர் தரத்திலான அதிக தேயிலைக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு வருடாந்தம் 20 மில்லியன் தேயிலைக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான பொறுப்புக்களை விவசாயத் துணைக் களத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை விவசாய திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.