காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இவர் ஒரு புகார் மனுவை அளித்தார் அந்த புகார் மனுவில், ”நான் எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவச் சிகிச்சைக்காக எனக்குச் சொந்தமான இடத்தை […]