கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பைக்குகள் மற்றும் யெஸ்டி பைக்குகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு இ.எம்.ஐ திட்டம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகைகளை வழங்குகின்றது.
பெரும்பாலான மோட்டார்சைக்கிள் மற்றும் வாகன தயாரிப்பாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.
Jawa & Yezdi Festive Offers
சிறப்பு சலுகை ஜாவா மற்றும் யெஸ்டி என இரண்டு பிராண்டில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் செல்லுபடியாகும். மேலும் 1,888 ரூபாய் முதல் EMI திட்டம் மற்றும் அனைத்து டெலிவரிகளுக்கும் 50,000 கிமீ அல்லது 4 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் வழங்கப்பட உள்ளது.
இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதில் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் மற்ற பிராண்டுகளுடன் இணைந்துள்ளன. இந்த தள்ளுபடி தீபாவளி வரை மட்டுமே பொருந்தும்.