நவம்பர் 3ல் வெளியாகும் சிறிய படங்கள்
விஜய் நடித்த 'லியோ' படம் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பாகவும், இரண்டு வாரம் பின்பாகவும் படங்களை வெளியிட யாருமே தயாராக இல்லை. 'லியோ' படத்திற்கான தொகை திரும்பி வந்தாக வேண்டுமே என தியேட்டர்காரர்களும் வேறு படங்களை வெளியிடத் தயாராக இல்லை.
'லியோ' படத்தின் ஓட்டம் இந்த வாரம் குறைந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 3ம் தேதி சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. “கொம்பு குதிரைகள், கபில் ரிட்டர்ன்ஸ், லைசென்ஸ், மூத்தகுடி, ராரா சரசுக்கு ராரா, ரூல் நம்பர் 4,” ஆகிய படங்கள் அன்று வெளியாகின்றன.
அதற்கடுத்த வாரம் தீபாவளியை முன்னிட்டு சில முக்கிய படங்கள் வருவதால் இந்த வாரம் வெளியாகும் படங்கள் அதிகபட்சமாக அடுத்த வாரம் வரைதான் தாங்கும். சிறிய பட்ஜெட் படங்கள்தான் தங்களுக்கு லாபகரமானவை என தியேட்டர்காரர்கள் சொன்னாலும் அப்படிப்பட்ட படங்களை அவர்கள் வெளியிடத் தயங்குகிறார்கள் என்பதும் உண்மை.