ரஜினி படத்தில் சீனியர் வக்கீல் ஆக அமிதாப் பச்சன்?
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார். தற்போது இப்படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் கிடைத்தது. அதன்படி, இதில் அமிதாப்பச்சன் சீனியர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.