2023 Honda CB350 on-Road Price – ஹோண்டா ஹைனெஸ் CB350, CB350 RS பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக் மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களும் மிக சிறப்பான ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

ஹைனெஸ் சிபி 350 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா 350, யெஸ்டி போன்ற பைக்குகளுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

2023 Honda H’Ness CB350 & CB350 RS

ஹோண்டாவின் CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களிலும் பொதுவாக 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இரு பைக் மாடலிலும் உள்ள டிஜிட்டல் அனலாக் முறையிலான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.

Honda higness cb350 rs headlight

CB350 பைக்கில் DLX, DLX Pro, DLX Pro டூயல் டோன், DLX Pro Chrome, மற்றும் ,நியூ ஹியூ எடிசன் LEGACY எடிசன் என ஐந்து விதமாக  கிடைக்கும் நிலையில் கூடுதலாக கஸ்டைமைஸ் வசதிகளில் CB350 மாடலில் கஃபே ரேசர், கம்ஃபோர்ட், சோலோ கேரியர் மற்றும் டூரர் என நான்கு விதமான கஸ்டமைஸ் வசதிகளும் CB350 RS பைக்கில் கஃபே ரேசர் மற்றும் எஸ்யூவி கஸ்டம் என இரண்டு மொத்தமாக 6 விதமான கஸ்டமைஸ் வசதி உள்ளது.

கஸ்டமைஸ் கிட்கள் ரூ.7,500 முதல் ரூ.22,600 வரை கூடுதலாக கட்டணத்தை செலுத்தி வசதிகளை பொருத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – சிபி 350 பைக்கின் கஸ்டம் கிட் வசதிகள்

honda cb350 custom kits launched

2023 Honda H’ness CB350 on-Road price in Tamil Nadu

தமிழ்நாட்டில் விற்பனையில் கிடைக்கின்ற ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.41 லட்சம் முதல் ரூ.2.48 லட்சம் வரை கிடைக்கின்றது.

H’Ness CB350 EX-SHOWROOM ON-ROAD PRICE
DLX Rs.210679 Rs.240155
DLX PRO Rs.213678 Rs.243430
DLX PRO CHROME Rs.215677 Rs.245613
LEGACY EDITION Rs.217178 Rs.247252

Honda CB350 RS Black

2023 Honda CB350 RS on-Road price in Tamil Nadu

தமிழ்நாட்டில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 ஆர்எஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.46 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை கிடைக்கின்றது.

CB350 RS EX-SHOWROOM ON-ROAD PRICE
DLX Rs.215677 Rs.245613
DLX PRO DUAL TONE Rs.218678 Rs.248892
DLX PRO Rs.218678 Rs.248892
NEW HUE EDITION Rs.220179 Rs.250530

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமாதாகும். மேலும் கூடுதல் ஆக்செரிஸ் மற்றும் கஸ்டமைஸ் வசதிகள் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுபடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.