கோல்கட்டா: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 204 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் மகமதுல்லா அரை சதம் அடித்தார்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோலகட்டாவின் ஈடன் கார்டனில் நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் சாகிப் பவுலிங் தேர்வு செய்தார். வங்கதேச அணிக்கு ஷாகீன் ஷா ‘வேகத்தில்’ தொல்லை தந்தார். இவரது பந்துவீச்சில் தன்ஜித் (0), நஜ்முல் (4) சிக்கினர். முஷ்பிகுர் 5 ரன்னில் திரும்பினார்.
லிட்டன், மகமதுல்லா இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இப்திகார் பந்துவீச்சில் லிட்டன் (45) அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட மகமதுல்லா அரை சதம் அடித்தார். கேப்டன் சாகிப் 43 ரன்னில் வெளியேறினார். வங்கதேச அணி 45.1 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement