சென்னை: Dhanush 51 (தனுஷ் 51) தனுஷ் நடிக்கவிருக்கும் அவரது 51ஆவது படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற தனுஷின் ஆசை நிராசை ஆனது.