சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை – அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன

சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, அதனால் சமூகத்தை நேர்வழியிலிருந்து திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது “சமூக … Read more

`54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம்' குன்றத்தூர் முருகன் கோயில் – சிலிர்க்க வைக்கும் பின்னணி!

‘தென் தணிகை’ என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பினை உடையது குன்றத்தூர் முருகன் கோயில். சென்னைக்கு அருகே தாம்பரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் சேக்கிழார் பெருமான் வழிபாடு செய்த சிறப்பினை உடையது. ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரிலும் கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும் தாருகாசுரனை திருப்போரூரிலும் சம்ஹாரம் செய்தார் முருகன். திருப்போரூரில் சம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் குமரன் அமர்ந்த மலை குன்றத்தூர் மலை … Read more

பட்டா வழங்கக் கோரி திருநாகேஸ்வரம் கோயில் இடங்களில் வசிக்கும் 2,000 குடும்பத்தினர் திரண்டதால் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரத்தில் கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்காததால் அரசு ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல் மேட்டுத் தெரு, தோப்புத் தெரு, நேதாஜி திடல் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரிகள் செலுத்தி, மின் இணைப்புகள், ரேசன் அட்டை, ஆதார் … Read more

சிக்கிம் வெள்ளம் | இதுவரை 3 உடல்கள் மீட்பு; 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இதுவரை அவர்களின் நிலை என்னவென்று தெரியாத சூழலே உள்ளது. தலைநகர் காங்டாக் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது லோனக் ஏரி. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் … Read more

ராமாயண கதையில் சீதையாக சாய் பல்லவி-ராமனாக ரன்பீர் கபூர்..அப்போ ராவணன் யாருப்பா?

Sai Pallavi in Ramayana Movie: புதிதாக உருவாக உள்ள ராமாயண கதையில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பளீச்!

Edappadi Palanisamy In Tamil Nadu: தமிழக பாஜகவின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு மட்டும் பேட்டிங் பிட்ச்..! அனைத்து போட்டிகளுக்குமான மைதானங்கள் ஒரு பார்வை

உலக கோப்பையை இந்தியா இம்முறை தனியாக நடத்துகிறது. போட்டியை நடத்தும் அணியாக இந்திய அணி உலக கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் விளையாட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. எம்எஸ் தோனி தலைமையில் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்திய அணி வென்றது. … Read more

"இந்தக் காரணங்களால்தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருக்கிறேன்"- நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என  முன்னணி நடிகர்களுடன்  நடித்த அவர் சமீபத்தில்  வெளியான ஜெயிலர் படத்தில் உள்ள காவாலா பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருந்தார். இதனிடையே தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி நடித்து வரும் தமன்னா தென்னிந்தியப் படங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதற்கா காரணத்தைத்  தெரிவித்திருக்கிறார்.  தமன்னா | Tamannaah Bhatia ஃபிலிம்பேர் … Read more

ஐபோன் 14: ஆஃபரில் பிளிப்கார்ட் சரவெடி.. வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்!

ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு ஆப்பிள் ஐபோன் 14 பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023-ன் போது ஆப்பிள் ஐபோன் 14 விலை மேலும் குறையும். இந்த விற்பனையில், ஆப்பிள் ஐபோன் 14 ரூ.49,001 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ.20,899-க்கு கிடைக்க உள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் பிளஸ் ஆகியவற்றுடன் … Read more

‘நூரி’ சோனியா காந்திக்கு கிடைத்த பரிசு : தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி… வீடியோ

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா சென்று நாய்க்குட்டி ஒன்றை ராகுல் காந்தி வாங்கி வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை இன்று தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘நூரி’ தனது குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். கோவாவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே மற்றும் அவரது கணவர் … Read more