'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதே சமயம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாக உள்ள 'கோஸ்ட், டைகர் நாகேஸ்வர ராவ்' ஆகிய இரண்டு பான் இந்தியா படங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழல் 'லியோ' படத்திற்கு ஏற்பட்டுள்ளது. கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் 'கோஸ்ட்' என்ற ஆக்ஷன் … Read more

Bigg Boss 7: இவரு என்ன என் மாமனா மச்சானா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட விஷ்ணு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணுவிற்கும் மாயாவிற்கும் காரசரமான விவாதம் நடக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது, இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்த சீசனின் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை கவராத 6 பேர் சுமால்

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- ஐக்கிய ஜனதாதளம் பாராட்டு

புதுடெல்லி, பீகாரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன், “முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தும் பா.ஜ.க.வின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னேற்றம் மற்றும் … Read more

இரானி கோப்பையை வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா

ராஜ்கோட், சவுராஷ்டிரா – ரெஸ்ட் ஆப் இந்தியா இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 308 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 94 ரன் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 160 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் … Read more

இத்தாலியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி

வெனிஸ் (இத்தாலி), வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர். வெனிசுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி … Read more

சர்வதேச உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டுமா அல்லது நாட்டின் சட்டத்தின்படி செயல்படுவதா என்பது பற்றி சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்

எட்மண்ட் ரணசிங்க, இந்த நாட்டில் பத்திரிகைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய திறமையான ஊடகவியலாளர்- எட்மண்ட் ரணசிங்க கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. அவரின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியைப் போற்றும் வகையில் தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் பத்திரிகைப் புரட்சி’ புத்தகம் வெளியிடப்பட்டது. சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் … Read more

Virat Kohli: `தயவு செஞ்சு டிக்கெட் கேட்றாதீங்க!' – கோலி அலர்ட்

உலகக்கோப்பைத் தொடர் நாளை முதல் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுவதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண டிக்கெட் வேண்டிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் கேட்ட தன்னுடைய நண்பர்களுக்காக விராட் கோலி ஜாலியாக ஒரு அலர்ட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். Virat Kohli உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஏறக்குறைய மூன்று கட்டங்களாக டிக்கெட் விற்பனை நடந்திருந்தது. சென்னையில் அக்டோபர் 8 ஆம் … Read more

புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்: தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திவைக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகனுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று(புதன்கிழமை) ஜாமீன் வழங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், “இது சட்டபூர்வமான விஷயம். நாங்கள் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரானோம். நீதிமன்றம் எங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார். வழக்கு கடந்துவந்த … Read more

நற்பெயருக்கு களங்கம்! 10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஏஆர் ரகுமான் ரூ. 29.50 லட்சம் பணத்தை தங்களிடம் ஏமாற்றிவிட்டதாக நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.