மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

கொழும்பு, இலங்கை கடந்த ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு மற்றும் காலாவதியான ஊசி மருந்துகளால் ஆஸ்பத்திரிகளில் அதிக மரணங்கள் நடந்தன. இதை தொடர்ந்து இலங்கை சுகாதாரத் துறை அவசரகால கொள்முதலுக்கு உத்தரவிட்டது. இது பெரிய அளவிலான ஊழல்களுக்கு வழிவகுத்தது, இது தரமற்ற மருந்துகளை சரியான தர சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்; 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

Tamil News Live Today: சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம்! சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதள சேவை பாதிப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையம் துபாய், … Read more

குமரியில் விடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; முதியவர் மரணம் – முழு நிலவரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை தவறிய நிலையில், கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மழை அதிகரித்தது. … Read more

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். சீன நிறுவனங்களிடம் இருந்து ரூ.38 கோடி நிதி பெற்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக, நியூஸ்கிளிக் இணையதளத்தின் அலுவலகத்துக்கு நேற்று (அக்.3) அமலாக்கத்துறை சீல் வைத்தது. இந்நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங்,உர்மிலேஷ், ஆனின்டியோ சக்ரவர்த்தி, வீடியோகிராபர் அபிஷர் சர்மா, எழுத்தாளர் கீதா ஹரிகரன் உட்பட பலரது வீடுகளில் … Read more

இத்தாலியில் பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து: தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் உயிரிழப்பு

வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில் மார்கெரா மாவட்டத்தில் உள்ள தங்களது முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் மேஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்றின் மீது வந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு … Read more

ரசிகர்களை இறுக்கமாக பற்றியதா ‘இறுகப்பற்று’ திரைப்படம்..? விமர்சனம் இதோ..!

Irugapatru Movie Review Tamil: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இறுகப்பற்று திரைப்படம் எப்படி? விமர்சனம் இதோ. 

பொறியியல் பணி: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவையில் இரவுப நேரம் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன என ரயில்வே … Read more

மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த கனமழை.. சிக்கிமில் 23 ராணுவ வீரர்கள் மாயம்? தேடும் பணி தீவிரம்

கேங்டாக்: வடக்கு சிக்கிமில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை கடுமையாக தாக்கியுள்ளது. இந்நிலையில், 23 ராணுவ வீரர்கள் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. Source Link

இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சினிமாவை விட சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக நடித்து வருகிறார் ஸ்ருதி ராஜ். அதிலும், சீரியல் தான் இவருக்கு அதிக புகழ் வெளிச்சத்தை பெற்று தந்தது. கிட்டத்தட்ட 43 வயதை நெருங்கியுள்ள ஸ்ருதிராஜுக்கு இப்போது வரை திருமணமாகவில்லை. ஆனால், இளமை ததும்பும் அழகில் புதிய தலைமுறை நடிகைகளையே தூக்கி சாப்பிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்ருதி ராஜின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், … Read more