Thalaivar 170: கெத்தா நடந்து வரான்.. கேட்டை எல்லாம் திறந்து வரான்.. தொடங்கியது தலைவர் 170 ஷூட்டிங்!

சென்னை: அக்டோபர் 1ம் தேதி அதிரடியாக தலைவர் 170 படத்தின் டீம் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்த லைகா நிறுவனம் நேற்று வரை அப்டேட் மழை பொழிந்து வந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேற்றே விமானம் மூலம் கிளம்பிய சூப்பர்ஸ்டார் தலைவர் 170 படம் நல்ல கருத்துள்ள

வெளிநாட்டுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ராய்ப்பூர், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். ஜெகதால்பூர் என்ற இடத்தில் நடந்த மத்திய அரசு விழாவில், ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவற்றில், பஸ்தார் மாவட்டத்தில் அமையும் உருக்காலை, டடோகி-ராய்ப்பூர் இடையிலான மின்சார ரெயில் சேவை ஆகியவையும் அடங்கும். இரட்டை ரெயில்பாதை அமைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விழாவில், காங்கிரஸ் முதல்-மந்திரி … Read more

ஆசிய விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் சிந்து, பிரனாய் வெற்றி

ஹாங்சோவ், ஸ்குவாஷ் போட்டியில் அசத்தல் ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-15 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வென் சி ஹூவை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றியை ருசித்தனர். ஸ்குவாஷ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் கால்இறுதியில் இந்திய … Read more

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்: 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது

அங்காரா, சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகள் குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அங்கிருந்து கொண்டு துருக்கி நாட்டின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் இவர்களை ஒடுக்க துருக்கி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றம் அருகே சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மற்றொரு பயங்கரவாதியை போலீசார்சுட்டுக்கொன்றனர். ஏவுகணை தாக்குதல் கூட்டத்தொடர் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.  மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி … Read more

Doctor Vikatan: எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வேலையில் கணவர்…. குழந்தையின்மைக்கு அந்த வேலை காரணமாகுமா?

Doctor Vikatan: என்  தோழிக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை.  அவளின் கணவர் ரேடியாலஜிஸ்ட்டாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லாததற்கு இந்த வேலைதான் காரணமாக இருக்கும் என்கிறாள் என் தோழி. ஒருவர் பார்க்கும் வேலைக்கும் அவரது கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறதா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: தட்டணுக்களும் ஹீமோகுளோபினும் குறையும் பிரச்னை; அடிக்கடி தொடர்வது … Read more

தமிழகத்தில் அக். 9 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அக். 9-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக். 4) முதல் வரும் 9-ம் தேதிவரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் … Read more

ஜார்க்கண்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளி மாணவிகள் இஸ்ரோவுக்கு சுற்றுப்பயணம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் மிகவும் பின்தங்கிய கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 25 பேர் இஸ்ரோவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள விஞ்ஞானிகளிடம் வான் அறிவியல் தொடர்பான பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இஸ்ரோவுக்கு பயணம் மேற்கொண்ட மாணவிகளுள் ஒருவரான மனிஷா குமாரி (15) கூறியுள்ளதாவது: ஜார்க்கண்டில் மிகவும் ஏழ்மையான மாவட்டமான கும்லாவில் வசிக்கும் நான் இதற்கு முன் வெளியே சென்று ரயிலைக் கூட பார்த்ததில்லை. இந்த நிலையில், நான் உட்பட 25 பள்ளி மாணவிகள் இணைந்து சென்னைக்கு … Read more

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ்மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக்கப்பட்டது. 2-ம் நாளான் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, … Read more

அக்டோபர் மாதம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

அக்டோபர் மாதம் பல புதிய படங்களும், வெப் தொடர்களும் இணையத்திலும், திரையரங்கிலும் வெளியாக உள்ளது.  இந்த மாதம் ரசிகர்களுக்கு ஜாக்பார்ட் தான்.