இந்தியா – கனடா இடையே ஆக்கபூர்வ உரைவ தொடர கனடா பிரதமர் விருப்பம்

டொரோண்டா கனடா பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் ஆக்க பூர்வ உரைவத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.  மாறாகக் … Read more

பாலத்திலிருந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து.. பரிதாபமாக பறிபோன 21 உயிர்கள்! இத்தாலியில் சோகம்

ரோம்: இத்தாலியில் சுற்றுலா பேருந்து மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள மெஸ்ட்ரேயில் மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறுகையில், “வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணிகளுடன் இந்த Source Link

கலவரம் பாதித்த பகுதி மக்கள் மது பங்காரப்பா மீது அதிருப்தி| The people of the riot affected area are unhappy with Madhu Bangarappa

ஷிவமொகா : கலவரம் நடந்து பகுதிக்கு சென்ற அமைச்சர் மது பங்காரப்பா, அதிகம் பாதித்த பகுதிக்கு வரவில்லை என பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஷிவமொகா மாவட்டம், ராகிகுட்டாவின் சாந்தி நகருக்கு தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: ஷிவமொகாவில் ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக, இதுவரை 24 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோதலின் போது சிறு காயங்கள் ஏற்பட்டன. வழக்கு தொடர்பாக முழு தகவல்கள் … Read more

எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கேரக்டரில் காமெடியில் கலக்கி வரும் ஹரிப்ரியா, தனக்கு அறிவுரை செய்தால் பிடிக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், 'நாம் ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது உதவி செய்ய முன் வராதவர்கள், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் அட்வைஸ் பண்ண தேவையில்லை. நான் எவ்வளவோ பிரச்னைகளை தாண்டித்தான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். தலைக்கனமாக சொல்லவில்லை. என்னுடைய இத்தனை வருட பயணத்தில் நான் இங்கு சென்றால் இடிக்கும் அங்கு சென்றால் … Read more

விடாமுயற்சி படத்தில் ரஜினிகாந்தா?.. அஜித்துடன் அஜர்பைஜானில் என்ன கோலத்தில் இருக்காரு பாருங்க!

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த உள்ள விடாமுயற்சி திரைப்படம் அஜார் பைஜானில் ஆரம்பமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக ஏஐ அட்டகாசத்தை நெட்டிசன்கள் ஆரம்பித்துள்ளனர். ஏஐ எனும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கொண்டு ஏகப்பட்ட புகைப்படங்களை

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி – சிராக் பாஸ்வான் தாக்கு

புதுடெல்லி, பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அந்த மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ‘பீகார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் அரசியல் சதி தெளிவாக தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சாதி அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அதன் எண்ணிக்கை … Read more

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி- ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை.!

ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேரடியாக கால்இறுதியில் களம் இறங்கிய இந்திய அணி நேற்று நேபாளத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி அணிக்கு அருமையான அடித்தளம் அமைத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 25 ரன்னிலும், அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து … Read more

பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் கரை ஒதுங்கிய டால்பின்கள்

பிரேசிலியா, காலநிலை மாற்றத்தால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளையும் இது விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த சில நாட்களாக 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்தநிலையில் அங்குள்ள டெபே ஏரியில் சுமார் 100 டால்பின்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக வெப்பநிலை காரணமாக … Read more

“தமிழ்நாட்டில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள்… ஏன்?!” – பிரதமர் மோடி பேசியது என்ன?!

தமிழ்நாட்டில், கோயில்கள் விவகாரத்தில் மாநில இந்து சமய அறநிலையத்துறை அத்துமீறுவதாக, தமிழ்நாடு பா.ஜ.க பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறது. அண்மையில் கூட, சனாதன விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். மோடி இந்த நிலையில், `தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்’ என்று தி.மு.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடியிருக்கிறார். தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டிலிருக்கும் கோயில்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் … Read more