விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளின் அடாவடி வசூல்: அரசு வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள்

சென்னை: அண்மையில் முடிவுற்ற தொடர் விடுமுறை நாட்களில் கடுமையாக உயர்த்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை செலுத்தி பயணித்த பொதுமக்கள், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண அரசு முயற்சிக்குமா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. இதனால்சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்போர் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியே சொந்த ஊர் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இதில் குடும்பமாக சொந்த … Read more

ரூ.35 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: சத்தீஸ்கர், தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: சத்தீஸ்கரில் ரூ.27 ஆயிரம் கோடி, தெலங்கானாவில் ரூ.8 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சத்தீஸ்கர் சென்ற பிரதமர் மோடி ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார். இதில் நகர்னார் பகுதியில் ரூ.23,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள என்எம்டிசி … Read more

நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது

புதுடெல்லி: நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும் இதையடுத்து 2.51 மணிக்கு 6.2 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் சுமார் 1 நிமிடம் நீடித்தன. முதல் நிலநடுக்கம் பூமியில் 10 கி.மீ. ஆழத்திலும் இரண்டாவது நிலநடுக்கம் 5 கி.மீ. … Read more

டில்லியில் இன்று பல இடங்களில் 6.2 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு

டில்லி டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று 6.2 ரிகடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று  டில்லி மற்றும்சுற்ற்றுப்புறம் உள்ள பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  மதியம் சுமார் 2.25 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.   இந்த நில நடுக்கம் டில்லியில் மட்டும் இன்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் … Read more

பெண்கள் மயமாகிறது குடியரசு தின அணிவகுப்பு| Republic Day parade for women

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக, அடுத்த ஆண்டு புதுடில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டுமென்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலகட்டத்தில் இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டும், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், தற்போதைய … Read more

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்று பிரபலமாகியுள்ளார் சரவண விக்ரமன். அவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் என்ட்ரியாகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக கடைசிநாள் ஷூட்டிங்கை முடித்து பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியான சரவண விக்ரமன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த வாய்ப்பு நான் ரொம்ப நாள் எதிர்பார்த்தது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே எனக்கு இதுவும் பெரிய … Read more

Baakiyalakshmi serial: ஜெனிக்கு பெண் குழந்தை.. கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி பேமிலி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய தினம் செழியனின் மனைவி ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையொட்டிய குடும்பத்தினரின் பரிதவிப்பு, கொண்டாட்டம் போன்றவை இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகியுள்ளன. பேத்தி பிறந்த சந்தோஷத்தில், மருத்துவமனையிலேயே கோபி இருக்க, ராதிகாவின் அம்மா, இதுகுறித்து தன்னுடைய மகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். விஜய்

ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்: உடல்நலக் குறைவால் 250 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் ஆகிய இடங்களில் இடங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, மடிக்கேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பக‌லாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து … Read more

இந்தியாவில் பணியாற்றும் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற கனடாவுக்கு கெடு

புதுடெல்லி: இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை வரும் 10-ம் தேதிக்குள் திரும்பபெறுமாறு கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது. அதன்பிறகு, அவர்களது தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1980-1990 காலகட்டத்தில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் தலைதூக்கின. காலிஸ்தான் பெயரில் தனி நாடு கோரி அந்த அமைப்புகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் பிரிவினைவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டன. … Read more