தமிழகத்தில் 9 வாரங்களாக 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் எம் பி காட்டம்

கரூர் தமிழகத்துக்கு 9 வாரங்களாக 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இன்று கரூர் எம்.பி. ஜோதிமணி  தனடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஜோதிமணி ‘100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, (2 மாதத்துக்கு மேலாக) ஊதியம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். அதில் 91 … Read more

மார்ச் 17ல் அரசியலில் இருந்து ஓய்வு சீனிவாச பிரசாத் எம்.பி., அறிவிப்பு| Srinivasa Prasad MP to retire from politics on March 17, announcement

சாம்ராஜ்நகர் : ”வரும் 2024 மார்ச் 17ம் தேதியுடன், நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனவே, அன்று என் அரசியல் ஓய்வு பற்றி அறிவிப்பேன்,” என சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் தெரிவித்தார். கர்நாடகா பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, ஆனந்த் சிங் ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் நேற்று … Read more

ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ்

பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட பவித்ரா ஜனனி தனது நண்பர்களுடன் அடிக்கடி எங்காவது சுற்றுலா சென்று வருகிறார். இந்நிலையில், தற்போது அவருடன் சேர்ந்து தர்ஷிகா, ஆர்த்தி சுபாஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்களும் கொடைக்கானல், பூம்பாறை என ஜாலியாக ட்ரிப் அடித்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் அருவி மலைகளிலும், கொடைக்கானலில் ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டியும் ஜாலியாக எஞ்சாய் செய்துள்ளனர். அந்த புகைப்படங்களானது தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்கள் பலரும் மாலத்தீவு, ஸ்ரீலங்கா என … Read more

Bigg Boss 7 – என் ரூல்ஸையே மீறுகிறீர்களா.. அங்கேயே போங்க.. விசித்திரா, யுகேந்திரனுக்கு பிக்பாஸ் அடித்த ஆப்பு

சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) விசித்திராவையும், யுகேந்திரனையும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா,

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம்

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக … Read more

சென்னையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் திருப்பதியில் கடத்தல் 

திருப்பதி: திருப்பதியில் சென்னையைச் சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது மனைவி, மற்றும் இரண்டு மகன்களுடன் திருப்பதிக்கு வந்தார். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு நேற்று இரவு மீண்டும் சென்னை செல்ல திருப்பதி பேருந்து நிலையம் வந்தார். சென்னை பேருந்துக்காக … Read more

தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறுவதை நம்பி ஏமாந்தவரால் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு…

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தொழில்முனைவோர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியில் இருந்து நிர்மலா சீதாராமானுடன் பேசவேண்டும் என்று நீண்ட நேரமாக குரல் எழுப்பி வந்தார். இதனை அடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தொழில்முனைவோருக்கு மத்திய அரசு தாராளமாக கடன் வழங்குவதாக நிதி அமைச்சர் … Read more

பெண்ணையாறு நடுவர் மன்றம்; உச்ச நீதிமன்றம் கேள்வி| Supreme Court question of womens jury

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி, பெண்ணையாறு நதி நீரைப் பங்கிடுவது தொடர்பான விவகாரத்தில், நடுவர் மன்றம் அமைக்காமல் இழுத்தடிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகாவில் உருவாகி, தமிழகம் வழியாக பாயும் பெண்ணையாற்றில், நதி நீரைப் பங்கிட்டு கொள்வது தொடர்பாக, இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை உள்ளது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் … Read more

அஜர்பைஜான் கிளம்பிய அஜித் – த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி'

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நாளை(அக்., 4) ஆரம்பமாக உள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் நடக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்குகிறது. இதற்காக அஜித் அஜர்பைஜான் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் கிளம்பி சென்ற போட்டோ, வீடியோ வெளியாகி உள்ளது. அதேப்போல் நடிகை த்ரிஷாவும் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார். இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி … Read more

உலக விலங்குகள் தினம்| World Animal Day

உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் ‘பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம். 1931ல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. … Read more