ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? – போனி கபூர் விளக்கம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 80களில் நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. 2018ம் ஆண்டு துபாய் ஹோட்டலில் பாத்ரூம் குளியலறையில் உள்ள பாத்-டப்பில் மூழ்கி இறந்துவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. அவர் தானாக விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற ரீதியில் அப்போதே சர்ச்சைகள் எழுந்தது. ஸ்ரீதேவி மறைவு குறித்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அது பற்றி மனம் திறந்து பேசி பேட்டியளித்திருக்கிறார் அவரது கணவரும் தயாரிப்பாளருமான போனி … Read more

Leo Trailer – சன் டிவிக்கும் விஜய்க்கும் பஞ்சாயத்தா?.. அதெல்லாம் இல்லைங்க.. லியோ ட்ரெய்லர் மூலம் கிடைத்த விடை

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லர் மூலம் சன் டிவிக்கும் விஜய்க்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை என்று உறுதியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கோலிவுட்டின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் டாப்பில் இருக்கும் படம் என்றால் அது லியோதான். ஏனெனில் இதற்கு முன்னர் வெளியான விஜய் படங்களான பீஸ்ட், வாரிசு ஆகிய

டெல்லிக்கு விரைந்த அண்ணாமலை; அதிருப்தி தெரிவித்ததா பாஜக High-Command?!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் ஆலோசிக்கவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கவும், தேசியத் தலைமையின் அழைப்பின்பேரில், அண்ணாமலை டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அண்ணாமலையின் இந்த டெல்லி விஜயம், அ.தி.மு.க-பா.ஜ.க முகாம்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலை சென்னைக்கு என்ன முடிவுடன் திரும்பப் போகிறார் என்ற கேள்வி, அரசியல் களத்தில் … Read more

கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் … Read more

‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு சீல் – அதிரடியின் பின்னணி என்ன?

புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய் இடம் இருந்து பணம் பெற்றதாகவும், சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, இந்நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நியூஸ்கிளிக் நிறுவனம் ரூ.86 கோடியை பெற்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு போலீசார், … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் நண்பகல் 2.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் திபாயல் நகருக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நில … Read more

சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி

PM Modi On Bihar Caste Census: என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, அது தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது – பிரதமர்.

அந்நியன் to சூப்பர் டீலக்ஸ்-மனநல பிரச்சனைகள் குறித்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..!

Tamil Movies Based On Mental Health: தமிழ் சினிமாவில் மனநலம் குறித்து எடுக்கப்பட்ட படங்கள் வெகு குறைவாகவே இருக்கின்றன. அவை என்னென்ன? இங்கு பார்ப்போம். 

Asian Games 2023: 15வது தங்கம்! பதக்கங்களை அள்ளும் வீர மங்கைகள்.. ஜொலிக்கும் இந்தியா!

Asian Games 2023 Medal Tally: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10வது நாளில் இந்தியா 15வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ஓட்டப்பந்தய வீராங்கனை பருல் சவுத்ரி 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 15 நிமிடம் 14:75 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார். பாருலுக்குப் பிறகு 800 மீட்டர் ஓட்டத்தில் முகமது அப்சல் (1 நிமிடம் 48.43 வினாடி) வெள்ளியும், மும்முறை … Read more