10 பேரை பலி வாங்கிய மெக்சிகோ தேவாலய விபத்து

மெக்சிகோ ஒரு தேவாலய மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் மெக்சிகோவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்தனர். இடிபாடுகள் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து மீட்பு … Read more

\"மணி ஹெய்ஸ்ட்\" சம்பவம்.. பண மழையை பொழிந்த மர்ம நபர்! நம் நாட்டில்தான்.. அருகே உள்ள வங்கிகள் பத்திரம்

ஜெய்ப்பூர்: மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வருவதைப் போல திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் பண மழை பொழிந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 2017இல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். முதலில் இந்த அங்குள்ள உள்ளூர் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் இந்த சீரிஸை வெளியிட்டது. உடனடியாக இது தாறுமாறாக ஹிட் Source Link

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை … Read more

Bigg Boss 7 Cool Suresh – மனைவியை நினைத்து கண் கலங்கிய கூல் சுரேஷ்.. அழ வைத்த பவா செல்லதுரை

சென்னை: Bigg Boss 7 Cool Suresh (பிக்பாஸ் 7 கூல் சுரேஷ்) பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் தனது மனைவியை நினைத்து கண்கலங்கியபடி பேசினார். தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த சூழலில் கடந்த ஞாயிற்று கிழமை

ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் … Read more

வீட்டுமனை பட்டா கேட்டு நடந்த மறியலில் டிஎஸ்பி சட்டையை பிடித்து இழுத்து வழக்கு; 9 பேர் சிறையிலடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். காந்தி ஜயந்தி தினமான நேற்று கறுப்புக்கொடியேற்றும் போராட்டம் நடத்துவதாக திராவிடர் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்த நிலையில், திடீரென திருவனந்தபுரம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. … Read more

“சீமான் கடைசியாக எப்போது காவிரியை பார்த்தார்?” – மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி

சாத்தூர்: “தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி இன்னும் முறியவில்லை. அண்ணாமலைக்காக கூட்டணி முறிந்ததாக அதிமுகவினர் வெளிவேஷம் போடுகிறார்கள்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். மேலும், சீமானுக்கும் சில கேள்விகளை அவர் எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் அங்கன்வாடி மையத்தையும், குண்டாயிருப்பு கிராமத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ”அரசு அலுவலகங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு | “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சி” – பிரதமர் மோடி விமர்சனம்

ராய்ப்பூர்: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஹார் மாநிலத்தில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது. இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய … Read more

எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): 2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இன்று (அக்.3) தெரிவித்தது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி … Read more