உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை.!

லக்னோ, நிலத்தகராறு உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் யாதவ் (வயது 50). மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஆவார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சத்யபிரகாஷ் துபே (54). இவருக்கும், பிரேம் யாதவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை, நிலத்தகராறு தொடர்பாக பேசுவதற்கு சத்யபிரகாஷ் துபே வீட்டுக்கு பிரேம் யாதவ் சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 6 பேர் கொலை தகராறு … Read more

லைவ்: ஆசிய விளையாட்டு – பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா…!

ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. Live Updates 2023-10-03 00:57:03 3 Oct 2023 7:26 AM GMT சாப்ட் டென்னிஸ்: சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 4ல் இந்தியா – ஜப்பான் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றிபெற்றது. சாப்ட் டென்னிஸ் … Read more

மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

மெக்சிகோ சிட்டி, வடக்கு மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் சாண்டா குரூஸ் தேவாலயம் உள்ளது. இங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. எனவே 100-க்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியேற முயற்சித்தனர். எனினும் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 10 பேர் பலி இதற்கிடையே இதுகுறித்து மீட்பு படையினருக்கு … Read more

வெளிநாட்டு ஆடை ரூ.3,000; திருப்பூர் தயாரிப்பு ரூ.60… ஏன் வித்தியாசம்? விளக்கும் சுரேஷ் சம்பந்தம்!

தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 77-வது ஆண்டு கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவின் பழமையான தொழில் முறை சங்கங்களில் ஒன்றாகும். இந்த நிகழ்வில் ‘ கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வி.விஷ்ணு, ‘ட்ரீம் தமிழ்நாடு’ அமைப்பின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், இந்துஸ்தான் சேம்பர் … Read more

காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தவீடு, வீடாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துணை இயக்குநர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் தினமும் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் நோய்தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப … Read more

ஷிமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் மோதல்: 40 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்ற மிலாது ந‌பி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ராணிகுட்டாவில் கடந்த 28 ஆம் தேதி மிலாது நபி ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் அங்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்வதால், மிலாது நபி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே நேற்று முன் தினம் அங்கு மிலாது … Read more

மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோ தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மெக்சிகோவின் மடெரோ நகரத்தில் உள்ள சான்டா க்ரூஸ் தேவாலத்தில் கடந்த ஞாயிறு (அக்.01) மதியம் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாதிரியார் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, கான்க்ரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 11 … Read more

ரத்தம் படம் குறித்து மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி!

“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!  

AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!

K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணிஉ முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

உலகக் கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்தப்போவது யார் யார்? – டாப் 5 வேகப்புயல்கள் இதோ!

ICC World Cup 2023, Best Fast Bowlers: கிரிக்கெட் என்பது அடிப்படையில் பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு உளவியல் ரீதியான யுத்தமாகும். எனவே, ஆட்டத்தில் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பினருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது.  ஆனால், இந்த டி20 யுகத்தில் பந்துவீச்சாளர்களின் நிலை சற்று பரிதாபகரமாகவே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புது பந்துகளை வீசுவதன் மூலம் வேகப் பந்துவீச்சாளர்களின் கலைகளுள் ஒன்றான … Read more