இன்று முதல் 6 நாட்களுக்குத்  தமிழகத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 6நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்/பில் “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 3) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

ஜாதியை வச்சு மக்களை பிரிக்கிறாங்க.. ஏமாந்துடாதீங்க.. பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. மோடி டென்ஷன்!

போபால்: ஜாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் அரசு மாநில அளவிலான ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த அவர்.. நாட்டில் ஒற்றுமையை பற்றி பேசாமல் ஜாதி ரீதியிலான Source Link

பி.எம்.டி.சி., டிப்போவில் உணவகம் திறப்பு| Opening of Restaurant at BMDC, Depot

பெங்களூரு, : பி.எம்.டி.சி., டிப்போக்களில், ஊழியர்களுக்கு ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இந்திரா உணவகங்களை காங்கிரஸ் அரசு திறந்துள்ளது. இவை ஏழைகளின் பசியைப் போக்குகின்றன. இதேபோன்று, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தரமான உணவு, சிற்றுண்டி அளிக்க உணவகம் திறப்பதாக, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படியே பெங்களூரில், பி.எம்.டி.சி.,யின் நான்காவது டிப்போவில் ‘காந்தி பாயின்ட்’ என்ற பெயரில், உணவகம் திறக்கப்பட்டது. இதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திறந்துவைத்தார். இங்கு … Read more

'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயைமைப்பில், விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் நடிப்பது பற்றி மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் … Read more

குஷ்புக்கு வயசு 53னா.. இல்ல 23னா..இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை: (Khushbu) நடிகை குஷ்பு தன்னுடைய 53ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல்

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஏலம்: ஆன்லைன் மூலம் நடக்கிறது

புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு கிடைக்கும் பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சமீபத்திய நாட்களில் அவருக்கு கிடைத்த பல்வேறு பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி மற்றும் ஏலம் நேற்று தொடங்கி இருக்கிறது. இந்த பொருட்களின் புகைப்படங்களை பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர், ‘தேசிய அருங்காட்சியகத்தில் இன்று … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆமதாபாத்தில் நாளை கோலாகல தொடக்க விழா

ஆமதாபாத், 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்பாக நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.சி.சி.யும் ஏற்பாடு செய்துள்ளது. இதில் லேஷர் ஷோ, வாணவேடிக்கை மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி இடம் பெறுகிறது. இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை … Read more

கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி – எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஒட்டாவா, கனடாவில் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தினார். ஸ்ட்ரீமிங் என்பது ஆன்லைன் நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு சேவை ஆகும். இதன்மூலம் மக்கள் தங்களது கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கு எதிராக தற்போது சில கட்டுப்பாடுகள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தநிலையில் உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் செயலியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த … Read more

Motivation Story: வறுமையிலிருந்து புகழ் வானுக்குப் பறந்த இசைப் பறவை டாலி பார்ட்டன் – நிஜக்கதை!

`இந்த உலகில் மகத்தான மாற்றம் எதுவுமே பேரார்வம் இல்லாமல் சாத்தியமானதில்லை.’ – ஜெர்மானிய தத்துவவியலாளர் ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரைடுரிச் ஹீகெல் (Georg Wilhelm Friedrich Hegel). அமெரிக்காவின் டென்னஸி, நாஷ்வில்லியில் இருக்கும் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் (Vanderbilt University Medical Center). அன்றைக்கு அந்த மருத்துவ மையத்துக்கு ஒரு செக் வந்திருந்தது. அனுப்பியிருந்தவர் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான டாலி பார்ட்டன் (Dolly Parton). பலமுறை அவர் இதுபோல நன்கொடை கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த முறை தொகை … Read more