ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள ப்ரித்விராஜ் தொண்டைமான், ராம்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்க பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு எனது பாராட்டுகள். மேலும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், … Read more

ம.பி., ராஜஸ்தானில் ரூ.26,260 கோடி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

சித்தோர்கர்/குவாலியர்: மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி, ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி என மொத்தம் ரூ.26,260 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். ராஜஸ்தானின் சித்தோர்கர் பகுதியில் நேற்று நடந்த விழாவில் எரிவாயு குழாய் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, இரட்டை ரயில் பாதை உட்பட ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசும்போது, “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். … Read more

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம்

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம் வரதவிநாயகர் மந்திர் , வரதவிநாயகா என்றும் உச்சரிக்கப்படுகிறது , இது இந்துக் கடவுளான விநாயகரின் அஷ்டவிநாயகர் கோயில்களில் ஒன்றாகும் . இது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் மற்றும் கோபோலிக்கு அருகில் உள்ள காலபூர் தாலுகாவில் அமைந்துள்ள மஹாட் கிராமத்தில் அமைந்துள்ளது . இந்த கோவில் 1725AD இல் பேஷ்வா ஜெனரல் ராம்ஜி மகாதேவ் பிவால்கரால் கட்டப்பட்டது (புனரமைக்கப்பட்டது)  . குழந்தை இல்லாத மன்னன், கௌடினியாபூரின் பீமனும் அவனது மனைவியும் தவம் செய்வதற்காக வனத்திற்கு வந்திருந்தபோது விஸ்வாமித்திர முனிவரை சந்தித்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஸ்வாமித்திரர் மன்னருக்கு ஒரு மந்திரம் (மந்திரம்) ஏகாஷர் கஜனை மந்திரத்தை உச்சரிக்கக் கொடுத்தார் , இதனால் அவரது மகனும் வாரிசுமான இளவரசர் ருக்மகந்தா பிறந்தார். ருக்மகந்தா அழகான இளம் இளவரசனாக வளர்ந்தான். ஒரு நாள், வேட்டையாடுவதற்காக ருக்மகந்தா ரிஷி … Read more

ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங்

நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங், ‛இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் … Read more

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு அறிவிப்பு| Medicine Nobel 2023 awarded to Katalin Karikó, Drew Weissman for their work in mRNA vaccines

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் … Read more

Baakiyalakshmi serial: 43 வயசுல என்ன செய்யனுமோ அதை செய்யறேன்.. மாமியாருக்கு பாடம் எடுத்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்கள் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. முதலிடத்தில் சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் தொடர் நிலை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் உள்ளது. தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வந்தாலும் பாக்கியா

கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம்(செப்டம்பர்) 28-ந் தேதி உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி தேசிய ரேபிஸ் நோய் தடுப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ரேபிஸ் நோய் அதில் கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரேபிஸ் நோயால் 25 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகத்தில் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், 99 சதவீதம் பேர் … Read more

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்தியா- நேபாளம் இன்று மோதல்

ஹாங்சோவ், ஆசிய விளையாட்டில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று விட்டது. இதன் ஆண்கள் பிரிவில் இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களம் இறங்குகிறது. நேரடியாக கால்இறுதியில் ஆடும் இந்திய அணி இன்று (செவ்வாய்க்கிழமை) கால்இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, திலக் வர்மா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், அர்ஷ்தீப்சிங் உள்ளிட்ட முன்னணி … Read more

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : மருத்துவம்  நோபல் பரிசு  கொரோனா தடுப்பூசி  கொரோனா