ஆப்கானிஸ்தான் அணியில் ஜடேஜா… உலகக் கோப்பையில் முக்கிய பொறுப்பாம்!

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் வெறித்தனமாக தயாராகி வருகின்றன. 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் இந்தியா, தலா 1 முறை கோப்பையை வென்றுள்ள பாகிஸ்தான், இலங்கை மற்றும் கோப்பையை முதல்முறையாக வெல்ல நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.  ஆப்கானின் எழுச்சி வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் … Read more

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக  ஆனந்த் பாட்டீல்  இருந்து வந்தார். இவர் சமீபத்தில், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, ஆளுநரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் … Read more

திருமண விழாவில் மொத்த குடும்பமும் தீயில் பலி.. அதிர்ச்சியில் பேச முடியாமல் தவிக்கும் மணப்பெண்! சோகம்

பாக்தாத்: திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பறிகொடுத்த மணப்பெண் அதிர்ச்சியில் நிற்கிறார். இந்த மோசமான விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சமீப Source Link

யு.ஐ.டி.ஏ.ஐ.. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு| Extension of post of UIDAI Chief Executive

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆதார் அமைப்பின் ஓங்கிணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சி.இ.ஓ. அமித் அகர்வால் பதவி காலத்தை மேலும் நீட்டித்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்கு முதல் மொபைல் சிம்கார்டு , பத்திரப்பதிவு வரை அனைத்து சேவைகளுக்கு தற்போது ஆதார் அட்டை அடையாள சான்றாக அவசியமாக உள்ளது. இதனை யு.ஐ.டிஏ.ஐ எனப்படும் ஒருங்கிணைந்த இந்திய தனித்துவ அடையள ஆணைய அமைப்பு வழங்கி வருகிறது.இதன் தலைமை நிர்வாகியாக அமித் … Read more

ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு

இயக்குனர் சுந்தர். சி, படங்களை இயக்குவதைத் தாண்டி அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒன் டூ ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர்களுடன் நீத்து சந்திரா, ராகினி திவேதி ஆகியோரும் நடிக்கின்றனர். கே.திருஞானம் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்க, 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ரயில் … Read more

Bigg Boss Tamil 7- பிக்பாஸ் 7.. நாமினேஷனில் டாப்பில் இருக்கும் வனிதா மகள் ஜோவிகா..டார்கெட்டுக்கு இதுவா காரணம்?

சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) இந்த வார நாமினேஷனில் பவா செல்லத்துரையைவிட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் வனிதா மகள் ஜோவிகா. பிக்பாஸ் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். யுகேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலரை தவிர்த்து பெரும்பாலும் பிரபலம் ஆகாதவர்களே இந்த

சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு டெங்கு; நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை!

தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளுக்குநாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் நாள்தோறும் 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆணையர் ராதாகிருஷ்ணன் கடந்த மாதம், டெங்கு காய்ச்சலின் தீவிரத்தால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்‌ஷன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சென்னை மாநகராட்சி … Read more

ஶ்ரீவில்லிபுத்தூர் | கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை காலால் உதைத்த ஊராட்சி செயலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்து, தனது ஆதரவாளர்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி … Read more

ராஜஸ்தானில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஜெய்பூர்: ராஜஸ்தானின் வளர்ச்சி என்பது தனது அரசின் மிகப்பெரிய முன்னுரிமை என்றும், அது மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், “இன்று அர்ப்பணிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ராஜஸ்தானில் … Read more

மருத்துவத்துக்கான நோபல் பரிசு | கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் தேர்வு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக 2023 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை ராயல் ஸ்வீடிஸ் அகாடமி இன்று (அக்.2) தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலமாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியில் எம்ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதலை … Read more