ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி… நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?

Indian Cricket Team: உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், கிரிக்கெட் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. வரும் அக். 5ஆம் தேதி தொடங்கி, நவ. 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என 10 அணிகள் விளையாட உள்ளன.  உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் இந்த தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான … Read more

2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு… கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் 2 பேருக்கு வழங்கப்பட்டது…

2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கோவிட்-19க்கு எதிராக mRNA வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹங்கேரியைச் சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய இருவரும் இணைந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்சசியில் … Read more

கேரளாவில் பருவ மழை குறைவு| Monsoon rainfall is low in Kerala

மூணாறு: கேரளாவில் தென் மேற்கு பருவ மழையை கடந்த 123 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மூன்றாவது முறையாக மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது தெரியவந்தது. கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தாண்டு ஜூன் 8ல் பருவ மழை துவங்கியது. மாநிலத்தில் பருவ மழை சராசரி 201.86 செ.மீ. மழை பதிவாக வேண்டும். இந்தாண்டு 132.61 செ.மீ. மட்டும் மழை பெய்தது. இது 34 சதவீதம் குறைவாகும். இதற்கு … Read more

அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர்

கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் பீர்த் சிங் , இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏலியன் தொடர்பான கதையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படம் இந்த வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு தள்ளியாவதாக அறிவித்தனர். இந்த நிலையில் “இந்த படத்தின் டீசரின் இறுதிகட்ட பணிகள் … Read more

கடவுளே என்ன ஆகியிருக்குமோ.. நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. வெங்கடேஷ் பட் வேதனை!

சென்னை: பிரபல சமையல் கலை நிபுணரான வெங்கடேஷ் பட் மாலில் தனது மகளுக்கு நடந்த விபரீத விபத்து குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி. சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் பட். கடந்த நான்கு

கோயிலுக்குச் சென்றவரிடம் செயின் பறிப்பு; திருடனுடன் போராடி தாலியைக் காப்பாற்றிய பெண்!

சென்னை தில்லை கங்கா நகர் 29-வது தெருவைச் சேர்ந்தவர் ராதா ராகவன் (46). இவர் 22.9.2023-ம் தேதி இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தில்லை கங்கா நகரில் நடந்து வந்த ராதாவைப் பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென அவரின் தாலி செயினைப் பிடித்து இழுத்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ராதா, செயினைக் கைகளால் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். ஆனால், ராதா அணிந்திருந்த செயின் அறுந்தது. இதில் இரண்டு சவரன் எடையுள்ள பாதி செயின் திருடனின் … Read more

''தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும்'': கே.எஸ்.அழகிரி

சென்னை: “காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு எதிராக அண்ணாமலை ஏன் எதுவும் பேசவில்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை … Read more

நக்சல் தீவிரவாதம் | ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: இடதுசாரி தீவிரவாதம் தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் இன்று (அக்.2) சோதனை நடத்தினர். இரண்டு மாநிலங்களிலும் இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மறைவிடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. தகவலின் அடிப்படையில் என்ஐஏ தனிப்படையினர் மாநிலப் போலீஸாருடன் இணைந்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 60 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ற … Read more

பீகார் சாதிவாரி மக்கள் தொகை… வெளியான முடிவுகள் – ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள் எத்தனை சதவீதம்?

Bihar Caste Based Census: பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதுகுறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.

பிரபல நடிகரின் கார் மோதி பெண் பலி..! போலீஸார் கைது செய்து விசாரணை..!

Kannada Actor Accident: பிரபல நடிகர் ஒருவரின் கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.