காஷ்மீர் கவர்னர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்..?

ஸ்ரீநகர், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், அந்தக் கட்சியில் இருந்து விலகியபிறகு கடந்த ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார். அதன் நிறுவன தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:- கவர்னர் ‘நான் காஷ்மீரின் அடுத்த துணைநிலை கவர்னர் ஆகப்போகிறேன் என்று புதிதாக ஒரு வதந்தி உலாவருகிறது. அதிகமாக செயல்படும் வதந்திக்கூடங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் … Read more

'ரோகித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன்'- பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கான் பேட்டி

ஐதராபாத், ஷதப் கான் பேட்டி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் துணை கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஷதப் கான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான்- இந்தியா (அக்.14-ந்தேதி) மோதலுக்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக எங்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டம் இருக்கிறது. உலகக் கோப்பையிலும் … Read more

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. இம்ரான்கான் ஏற்கனவே தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : அரசு ரகசியங்கள்  இம்ரான்கான்  … Read more

காவிரியில் நீர்வரத்து 3,446 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து, அணை நீர்மட்டம் 36.94 அடியாக சரிந்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை இல்லாதது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,524 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,446 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக … Read more

கேரள ரயிலில் தீ வைத்தது தீவிரவாத செயல்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

கொச்சி: கேரள ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தீவிரவாத செயல்தான் என என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து விரைவு ரயில் கண்ணூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றிதீ வைத்துள்ளார். தீ மளமளவென பரவியதில் சிலர் உயிர் பிழைப்பதற்காக ரயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும்9 பேர் காயமடைந்தனர். … Read more

நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா!

தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருக்கும் திரிஷா, அடுத்து அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்கப் போகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார் திரிஷா. அதோடு தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‛தி ரோடு' என்ற படம் அக்டோபர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது திரிஷா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூயார்க் நகரத்தில் உள்ள சாலைகளில் சைக்கிளில் அவர் … Read more

Bigg Boss 7 – நான் டிப்ஸ் சொல்லியா ஜோவிகா ஜெயிப்பா?.. பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் ரகளை பேச்சு

சென்னை: Bigg Boss 7 Vanitha Vijayakumar (பிக்பாஸ் 7 வனிதா விஜயகுமார்) பிக்பாஸ் 7ல் வனிதா விஜயகுமார் தனது மகள் குறித்து பேசியது பலரையும் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், மணிச்சந்திரா, ஜோவிகா,

'ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும்'; முதல்-மந்திரி சித்தராமையா அறிவுரை

பெங்களூரு: கர்நாடக அரசின் பெண்கள்-குழந்தைகள் நலத்துறை சார்பில் உலக மூத்த குடிமக்கள் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- மூத்த குடிமக்களை கவுரவமாக நடத்துவது மற்றும் அவர்களது வாழ்க்கையில் உள்ள மாண்புகளை நாம் பின்பற்றுவது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதை விட வாழ்கின்ற காலத்தில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது தான் முக்கியம். ஒவ்வொருவரும் நல்ல மனிதராக … Read more

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 298 ரன் சேர்ப்பு

ராஜ்கோட், இரானி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ஹனுமா விஹாரி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அந்த அணிக்கு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனும், மயங்க் அகர்வாலும் நல்ல தொடக்கத்தை தந்தனர். ஸ்கோர் 69-ஐ எட்டிய போது அகர்வால் 32 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் விஹாரி 33 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். பொறுமையாக … Read more

ஸ்பெயினில் இரவு நேர கேளிக்கை விடுதி தீப்பிடித்து 13 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. வார இறுதியை முன்னிட்டு இங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது அந்த விடுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த … Read more