''சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை'' – ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக -புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்துத் துறைக்கு தலைகுனிவாகும். சென்னை … Read more

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலத்தில் பிரதமர் மோடி 6 நாளில் 8 கூட்டத்தில் பங்கேற்பு

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி நேற்று முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஒரு வார கால பயணம் மேற்கொள்கிறார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பாஜக.வின் 2 பரிவர்தன் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று மதியம் நடந்த பரிவர்தன் மகாசங்கல்ப் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். … Read more

பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்'

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் ‛வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார்.இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான ‛லால் சலாம்' படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து … Read more

இதெல்லாம் நியாயமா பிக் பாஸ்?.. இந்த சீசனில் ஒரு சாமானியரும் இல்லை.. திருநங்கையும் இல்லையே?.. ஏன்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன சில சீசன்களாக திருநங்கை போட்டியாளர்களையும், சாமானியர்களையும் அறிமுகப்படுத்தி வந்து கமல்ஹாசன் அரசியல் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் அதெல்லாம் எங்க பாஸ் காணோம் என பிக் பாஸ் ரசிகர்கள் நாக்கைப் பிடுங்குவதை போல கேட்டு வருகின்றனர். மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும்

தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளம் சிவாஜி கணேசன்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின் … Read more

ம.பி. சட்ட பல்கலை.யில் மாணவிகளுக்கு சலுகை: மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி

புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் தர்மசாஸ்த்ரா தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச அரசின் நிர்வாகத்தில் தர்மசாஸ்த்ரா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஜபல்பூரில் செயல்படுகிறது. இதன் நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சிரமப்படும் நாட்களில் வகுப்புகளில் அமரத் தேவையில்லை. விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் … Read more

விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நாளை (அக்டோபர் 2ம் தேதி) இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள்.ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பிரியங்கா … Read more

BB7: குடும்ப வறுமையால் 16 வயதில் நடிக்க வந்த விசித்ரா.. பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடிப்பாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக நுழைந்துள்ளார். பிக் பாஸ் 7 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக ஒரே வீட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த முறை இரண்டு வீடு என்பதால், புதுசு ட்விஸ்ட்களும் புது

Bigg Boss 7 Tamil: பவா செல்லதுரை – `கடந்த சீசனில் இவரின் பெயர் பரிந்துரை' இந்த ஆண்டு போட்டியாளர்!

‘பிக் பாஸ்’ வரலாற்றிலேயே ஒரு எழுத்தாளர் போட்டியாளராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. கடந்த சீசன்களில் பொது மக்களிலிருந்து ஜூலி, ஷிவின், தனலட்சுமி போன்றோர் கலந்து கொண்டாலும், ஒரு எழுத்தாளர் இன்று வரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. அந்த பிம்பத்தை உடைத்து தற்போது தொடங்கியுள்ள ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்கிறார், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை. பவா செல்லதுரை இன்றைய டெக்னாலஜி உலகில் புத்தகம் வாசிப்பவர்கள் அறவே … Read more

அதிமுக பிரிவதால் என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படாது: அண்ணாமலை

கோவை: “தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி எனக்கு தெரிகிறது. களத்தில் அதன் விளைவுகளை நான் பார்க்கிறேன். 57 சதவீத தமிழக வாக்காளர்கள் 36 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கின்றனர். பாஜகவின் அரசியல் அவர்களைச் சார்ந்தது. அவர்களுடைய நலனைச் சார்ந்தது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக முறிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் … Read more